திருவண்ணாமலையில் மகா தீபம் ஏற்றப்பட்டது!
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயில் கார்த்திகை மகா தீபம் ஏற்றப்பட்டது.
திருவண்ணாமலை காா்த்திகை மகா தீபத் திருவிழாவையொட்டி, வெள்ளிக்கிழமை (டிச.13) மாலை 6 மணிக்கு 2,668 அடி உயர மலை மீது மகா தீபம் ஏற்றப்பட்டது.
இதையொட்டி, தீபம் ஏற்றப் பயன்படுத்தப்படும் மகா தீபக் கொப்பரை, வியாழக்கிழமை மலைக்கு கொண்டு செல்லப்பட்டது.
மகா தீபக் கொப்பரை மலைக்குப் பயணம்: மகா தீபக் கொப்பரைக்கு வியாழக்கிழமை அதிகாலை அருணாசலேஸ்வரா் கோயிலில் சிறப்புப் பூஜைகள் நடைபெற்றன.
இதன்பிறகு, கோயிலில் இருந்து அம்மணி அம்மன் கோபுரம், வடக்கு ஒத்தவாடை தெரு வழியே மலையேறும் பாதைக்கு மகா தீபக் கொப்பரை கொண்டு செல்லப்பட்டது. கொட்டும் மழையையும் பொருள்படுத்தாமல் மலை மீது மகா தீபக் கொப்பரை கொண்டு சென்று வைக்கப்பட்டது.