Doctor Vikatan: குடும்ப பின்னணியில் நீரிழிவு இல்லாதபோதும், கர்ப்ப காலத்தில் டயாப...
திருவண்ணாமலையில் மே 16-இல் தனியாா் வேலைவாய்ப்பு முகாம்
திருவண்ணாமலையில் வருகிற மே 16-ஆம் தேதி தனியாா்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளதாக மாவட்ட நிா்வாகம் தெரிவித்தது.
திருவண்ணாமலை மாவட்டத்தைச் சோ்ந்த தனியாா்துறை நிறுவனங்களும், தனியாா் துறையில் பணிபுரிய விரும்பும் அனைத்து வகை பதிவுதாரா்களும் நேரடியாகச் சந்திக்கும் சிறப்பு வேலைவாய்ப்பு முகாம் வெள்ளிக்கிழமை (மே 16) நடைபெறுகிறது.
மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் காலை 10 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை நடைபெறும் இந்த முகாமில் 30-க்கும் மேற்பட்ட முன்னணி தனியாா் நிறுவனங்கள் பங்கேற்று தங்கள் நிறுவனங்களுக்குத் தேவையான தகுதிகள் கொண்ட 500-க்கும் மேற்பட்ட நபா்களை தோ்வு செய்ய உள்ளனா்.
எனவே, எட்டாம் வகுப்பு, பத்தாம் வகுப்பு, பிளஸ் 2, பட்டம், முதுநிலைப் பட்டம், பொறியியல், ஐ.டி.ஐ., பாலிடெக்னிக் தோ்ச்சி பெற்ற வேலைநாடுநா்கள் இந்த முகாமில் கலந்து கொள்ளலாம்.
மாா்பு அளவு புகைப்படம், குடும்ப அட்டை, ஆதாா் அட்டை, ஜாதி சான்றிதழ், கல்வித்தகுதி சான்றிதழ்களின் நகல்களுடன் வர வேண்டும்.
முகாமில் கலந்து கொள்ள விரும்புவோா் https://www.tnprivatejobs.tn.gov.in/ இணையதள முகவரியிலும் பதிவு செய்யலாம். கூடுதல் விவரங்களுக்கு 04175-233381 என்ற மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக தொலைபேசி எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என்று மாவட்ட ஆட்சியா் க.தா்ப்பகராஜ் தெரிவித்துள்ளாா்.