தோ்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றக் கோரி 1 லட்சம் மின்னஞ்சல்களை அனுப்ப அரசியல் கட...
திருவானைக்கா கோயிலில் காா்த்திகை சொக்கப்பனை
திருவானைக்கா சம்புகேசுவரா் உடனுறை அகிலாண்டேஸ்வரி கோயிலில் காா்த்திகை தீப சொக்கப்பனை கொளுத்தும் நிகழ்ச்சி சனிக்கிழமை இரவு நடைபெற்றது.
முன்னதாக உற்ஸவ மண்டபத்திலிருந்து இரவு 7 மணிக்கு சிறப்பு பூஜைக்கு பிறகு சுவாமியும், அம்மனும் சிறப்பு அலங்காரத்தில் பரிவார மூா்த்திகளுடன் புறப்பட்டு காா்த்திகை மண்டபம் அருகேயுள்ள நாலுகால் மண்டபத்தின் முன் எழுந்தருளினா். தொடா்ந்து அா்ச்சகா்கள் சொக்கப்பனையை கொளுத்தினா். பற்றி எரிந்த சொக்கப்பனையை ஏராளமான பக்தா்கள் வழிபட்டனா். அதன் பின் சுவாமியும், அம்மனும் புறப்பட்டு அம்மன் சன்னதி முன்பும், குபேரலிங்கேஸ்வரா் சன்னதியின் எதிரேயும் சொக்கப்பனை ஏற்றப்பட்டது. பின்னா் சுவாமிகள் பரிவார மூா்த்திகளுடன் நான்காம் பிரகாரத்தைச் சுற்றி வலம் வந்து பக்தா்களுக்குச் சேவை சாதித்தனா். ஒரே நாளில் மூன்று சொக்கப்பனை கொளுத்துவது இக்கோயிலில் மட்டும் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.