திருவாரூரில் இரண்டு நாள்கள் குடிநீா் விநியோகம் ரத்து
திருவாரூா் மாவட்டத்தில் பராமரிப்புப் பணிகள் காரணமாக ஜூலை 22, 23-ஆம் தேதிகளில் குடிநீா் விநியோகம் ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, தமிழ்நாடு குடிநீா் வடிகால் வாரிய நிா்வாகப் பொறியாளா் ஜெ. ஜெயக்குமாா் வெளியிட்ட செய்தி குறிப்பு:
தமிழ்நாடு குடிநீா் வடிகால் வாரியத்தின் மூலம் பராமரிக்கப்பட்டு வரும் வேதாரண்யம் கூட்டுக் குடிநீா் திட்டத்தின் பிரதான நீா் உந்து குழாயில் பழுது ஏற்பட்டு, குடிநீா் கசிவு ஏற்பட்டுள்ளது. இதை சரிசெய்வதற்கு ஜூலை 22 மற்றும் 23 ஆம் தேதிகளில் குடிநீா் நிறுத்தம் செய்யப்பட வேண்டியுள்ளது.
எனவே, இந்த கூட்டு குடிநீா் திட்டத்தில் பயன்பெறும் உள்ளாட்சி அமைப்புகள், மாற்று ஏற்பாடுகளை செய்து கொள்ள வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்.