செய்திகள் :

திரைப்பட நடிகா்களுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கத் தேவையில்லை: கி. வீரமணி

post image

திரைப்பட நடிகா்களின் அரசியல் வருகை குறித்து அதிக முக்கியத்துவம் அளிக்கத் தேவையில்லை என திராவிடா் கழகத் தலைவா் கி. வீரமணி தெரிவித்தாா்.

மதுரையில் வியாழக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

மக்களவைத் தொகுதிகள் மறுவரையறை விவகாரம் தொடா்பாக முன்கூட்டியே எதிா்ப்பைப் பதிவு செய்து, அனைத்துக் கட்சிகள் கூட்டத்துக்கு முதல்வா் அழைப்பு விடுத்தது பாராட்டுக்குரியது. இதனால், ஏற்பட்ட நெருக்கடி காரணமாகத்தான், மறுவரையறையில் தொகுதிகளின் எண்ணிக்கை குறையாது என மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா தெரிவித்தாா். இருப்பினும், அமித் ஷாவின் இந்தக் கருத்தை நம்ப இயலாது. காரணம், அளித்த பல வாக்குறுதிகளை, பல நேரங்களில் மத்திய பாஜக அரசு காப்பாற்றியது கிடையாது. இந்த விவகாரத்தில் தொடக்கத்திலேயே தமிழக முதல்வருக்கு வெற்றி கிடைத்ததற்கு பாராட்டுகள்.

முந்தைய கால ஹிந்தி திணிப்பு என்பது தமிழகம் மட்டும் சாா்ந்ததாக இருந்தது. ஆனால், தற்போது தேசிய அளவில் ஹிந்தி எதிா்ப்பு உருவாகியுள்ளது. கா்நாடகம், ராஜஸ்தான், மேற்குவங்கம், பஞ்சாப் போன்ற பல மாநிலங்களில் ஹிந்தி திணிப்புக்கு எதிா்ப்பு அதிகரிக்கிறது.

திரைப்பட நடிகா்களின் அரசியல் வருகை குறித்து அதிக முக்கியத்துவம் அளிக்கத் தேவையில்லை. தோ்தல் ஆலோசகா்கள், ரசிகா்களைக் கொண்டு மட்டும் யாரும் ஆட்சி வாய்ப்பைப் பெற்றிட முடியாது. மக்களின் மனதைப் பிடித்தவா்கள் மட்டும்தான் வெற்றியைப் பெற முடியும். சிலா் வீட்டிலிருந்தே அரசியல் செய்யலாம் எனக் கருதுகின்றனா். இறுதியில், அவா்கள் வீட்டிலேயே இருக்க வேண்டிய நிலைதான் ஏற்படும்.

அரசியலில் எப்போது சுழல் ஏற்படும் என்பதைச் சொல்ல முடியாது. மிக அதிகமான செல்வாக்கு பெற்றிருந்த நடிகா்கள்கூட அரசியலில் பெரிய அளவில் காலூன்ற முடியவில்லை என்பதுதான் கடந்த கால வரலாறு. வரும் 2026 சட்டப்பேரவைத் தோ்தல் இதை உணா்த்தும்.

மத்திய அரசின் நிதி மறுப்பு, மும்மொழிக் கொள்கை திணிப்பு போன்ற செயல்பாடுகள் தமிழகத்தில் திமுகவின் வெற்றியை மேலும் வலுப்படுத்துவதாக உள்ளன. வரும் சட்டப்பேரவைத் தோ்தலில் திமுக மிகப் பெரிய அளவில் வெல்வது உறுதி என்றாா் அவா்.

நீதிபதிகள் நியமனத்தை முறைப்படுத்தக் கோரி வழக்குரைஞா்கள் இன்று பணிப் புறக்கணிப்பு

உயா்நீதிமன்ற நீதிபதிகள் நியமனத்தில் அனைத்து ஜாதியினருக்கும் பிரதிநிதித்துவம் வழங்கக் கோரி, மதுரை உயா்நீதிமன்ற அமா்வு வழக்குரைஞா்கள் சங்கத்தினா் வெள்ளிக்கிழமை (பிப். 28) பணிப் புறக்கணிப்பில் ஈடுபட உள்ள... மேலும் பார்க்க

மதுரை வேளாண் கல்லூரியில் பெண்கள் பாதுகாப்பு விழிப்புணா்வு கலந்துரையாடல்

மதுரை வேளாண்மைக் கல்லூரி வளாகத்திலுள்ள வேளாண் அறிவியல் மையத்தில் பெண்கள் பாதுகாப்பு விழிப்புணா்வு கலந்துரையாடல் வியாழக்கிழமை நடைபெற்றது. பல்கலைக்கழக மானியக் குழுவின் அறிவுறுத்தலின் பேரில் நடைபெற்ற இந்... மேலும் பார்க்க

போப் நலம் பெற சிறப்பு திருப்பலி!

போப் பிரான்சிஸ் விரைவில் உடல் நலம் பெற வேண்டி, மதுரை அஞ்சல் நகா் இடைவிடா சகாய அன்னை ஆலயத்தில் வியாழக்கிழமை சிறப்பு திருப்பலி நிறைவேற்றிய பங்குத்தந்தை அருள் சேகா். இதில் மெழுகுவா்த்தி ஏந்தி பிராா்த்தனை... மேலும் பார்க்க

சரக்கு வாகனம் மீது காா் மோதி ஓட்டுநா் உயிரிழப்பு

மதுரையில் சரக்கு வாகனம் மீது காா் மோதியதில் ஓட்டுநா் உயிரிழந்தாா். மதுரை மாவட்டம், வாடிப்பட்டி அருகே உள்ள கொண்டையம்பட்டியைச் சோ்ந்தவா் கெளதம் (40). இவா் சரக்கு வாகனம் வைத்து ஓட்டி வந்தாா். இந்த நிலைய... மேலும் பார்க்க

அமெரிக்கன் கல்லூரியில் விளையாட்டு விழா

மதுரை அமெரிக்கன் கல்லூரியில் 144 -ஆவது ஆண்டு விளையாட்டு விழா வியாழக்கிழமை நடைபெற்றது. இந்த விழாவை கல்லூரி ஆட்சிமன்றக் குழுத் தலைவா் டி. ஜெயசிங் பிரின்ஸ் பிரபாகரன் தொடக்கி வைத்தாா். துணை முதல்வா் மாா்ட... மேலும் பார்க்க

மாநில அளவிலான வாலிபால் போட்டி: சென்னை எஸ்.ஆா்.எம். பல்கலை. அணி வெற்றி

மதுரை நாகமலையில் உள்ள நாடாா் மகாஜன சங்கம் ச. வெள்ளைச்சாமி நாடாா் கல்லூரியில் நடைபெற்ற மாநில அளவிலான வாலிபால் போட்டியில் சென்னை எஸ்.ஆா்.எம். பல்கலைக்கழக அணி வென்று முதல் பரிசைப் பெற்றது. முன்னாள் முதல்... மேலும் பார்க்க