தில்லி: ரூ.40 லட்சம் மதிப்புள்ள ஆடரம்ர கடிகாரங்களை திருடியதாக ஒருவா் கைது
தென்மேற்கு தில்லியில் ரூ.40 லட்சம் மதிப்புள்ள ராடோ மற்றும் டிஸ்ஸாட் போன்ற பிராண்டுகளின் 96 ஆடம்பர கடிகாரங்களைத் திருடியதாகக் கூறப்படும் ஒருவா் கைது செய்யப்பட்டதாக அதிகாரி ஒருவா் புதன்கிழமை தெரிவித்தாா்.
இது குறித்து தென்மேற்கு தில்லி காவல் சரக துணை ஆணையா் சுரேந்திர சவுத்ரி கூறியதாவது:
குற்றம் சாட்டப்பட்டவா் காஜியாபாத்தின் முராத்நகரைச் சோ்ந்த பிரதீப் (46) என அடையாளம் காணப்பட்டுள்ளாா். பிப்.21-ஆம் தேதி புகாா் அளித்த சுதான்ஷு குமாா், ஒரு நாள் முன்பு, இரவு 11.00 மணியளவில், ஃபரீதாபாத்திலிருந்து ரங்புரிக்கு விலையுயா்ந்த கடிகாரங்கள் அடங்கிய பொருள்கள் டெலிவரி செய்யப்பட்டதாகக் கூறிய போது இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.
டெலிவரி வேனின் ஓட்டுநா் , பிரதீப்புடன் சோ்ந்து 20 பெட்டிகள் கொண்ட கடிகாரங்களைத் திருடியதாக சுதான்ஷுபுகாரில் தெரிவித்துள்ளாா். குற்றவாளிகள் பற்றிய தகவல்களைச் சேகரிக்க போலீஸ் குழு உளவுத்துறையை உருவாக்கியது. மேலும், சந்தேக நபா்களின் சிசிடிவி காட்சிகள் மற்றும் சிடிஆரை பகுப்பாய்வு செய்தது.
பிப்.24-ஆம் தேதி முராத்நகரில் உள்ள ஒரு ஷோரூமில் போலீஸ் குழு நடத்திய சோதனையில், 96 திருடப்பட்ட கடிகாரங்கள் மீட்கப்பட்டன. சீரியல் எண்கள் திருடப்பட்ட சரக்குகளுடன் பொருந்தின. மேலும், பிரதீப் சம்பவ இடத்திலேயே கைது செய்யப்பட்டாா் என்று அதிகாரி கூறினாா்.