செய்திகள் :

தில்லியில் அசைவம் சாப்பிட்ட மாணவிகள் மீது தாக்குதல்!

post image

தில்லி தெற்காசிய பல்கலைக்கழகத்தில் அசைவம் சாப்பிட்ட மாணவிகளை ஏபிவிபி அமைப்பினர் தாக்கியதாக எஸ்எஃப்ஐ அமைப்பினர் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர்.

அதேபோல், சிவராத்திரி தினத்தில் விரதம் இருந்த மாணவர்களுக்கு வலுகட்டாயமாக அசைவ உணவை எஸ்எஃப்ஐ அமைப்பினர் பரிமாறியதாக ஏபிவிபியினர் பரஸ்பர குற்றச்சாட்டை எழுப்பியுள்ளனர்.

நாடு முழுவதும் புதன்கிழமை சிவராத்திரி விழா கொண்டாடப்பட்டது. இந்த நிலையில், தில்லியில் உள்ள தெற்காசிய பல்கலைக்கழகத்தில் அசைவ உணவு சாப்பிட்ட மாணவ, மாணவிகள் மீது ஏபிவிபியினர் தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து இந்திய மாணவர்கள் சங்கத்தினர் (எஸ்எஃப்ஐ) வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:

”மகா சிவராத்திரியை முன்னிட்டு பல்கலைக்கழக உணவகத்தில் அசைவ உணவு வழங்கக்கூடாது என்ற ஏபிவிபியின் ஜனநாயக விரோத கோரிக்கையை நிறைவேற்றாததால் மாணவர்கள் மீது ஏபிவிபியினர் கொடூர தாக்குதல் நடத்தியுள்ளனர்.

பல்கலைக்கழக உணவகம் அனைத்து மாணவர்களுக்கும் பொதுவான இடமாகும். மேலும் எந்தவொரு சமூகத்தின் உணவுப் பழக்கவழக்கங்களையும் மற்ற மாணவர் சமூகத்தின் மீது திணிப்பது ஜனநாயக விரோதமானது மற்றும் மதச்சார்பற்றது.

ஏபிவிபி குண்டர்கள் மாணவியின் தலைமுடியைப் பிடித்து இழுக்கும் காட்சிகள் காணொலியில் இடம்பெற்றுள்ளது. அசைவ உணவு பரிமாறிய உணவக ஊழியர்களையும் அவர்கள் தாக்கினர்.

மாணவர்களை தாக்கியவர்கள் மீது தெற்காசிய பல்கலைக்கழக நிர்வாகம் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க : வக்ஃப் மசோதா: கூட்டுக்குழு பரிந்துரைத்த 14 திருத்தங்களுக்கு அமைச்சரவை ஒப்புதல்!

அதேபோல், எபிவிபி அமைப்பினரும், சிவராத்திரி அன்று விரதம் இருந்த மாணவ, மாணவிகளுக்கு வலுகட்டாயமாக அசைவ உணவை எஸ்எஃப்ஐ அமைப்பினர் பரிமாறியதாக குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர்.

இந்த நிலையில், தாக்குதலுக்கு உள்ளானதாக கூறப்படும் மாணவிக்கு மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் இரு தரப்பினரிடையே விசாரணை நடத்தப்பட்டு வருவதாக தில்லி காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

தில்லி பேரவைக்குள் நுழைய ஆம் ஆத்மி எம்எல்ஏக்களுக்கு தடை: அதிஷி

தில்லி சட்டப்பேரவை வளாகத்திற்குள் ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் நுழைவதைத் தடுத்து நிறுத்துவதாக எதிர்க்கட்சித் தலைவர் அதிஷி வியாழக்கிழமை தெரிவித்தார். பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு "சர்வாதிகாரத்தின் அனைத்து வரம்ப... மேலும் பார்க்க

வக்ஃப் மசோதா: கூட்டுக்குழு பரிந்துரைத்த 14 திருத்தங்களுக்கு அமைச்சரவை ஒப்புதல்!

வக்ஃப் சட்டத் திருத்த மசோதா தொடா்பான நாடாளுமன்ற கூட்டுக் குழு பரிந்துரைத்த 14 திருத்தங்களுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.நாடு முழுவதும் ‘வக்ஃப்’ வாரிய சொத்துகளை ஒ... மேலும் பார்க்க

நோட்டுக்குள் மறைத்து 4 லட்சம் டாலர்களை மாணவிகள் மூலம் கடத்தல்! புணேவில் இருவர் கைது!

நோட்டுக்குள் 4 லட்சம் அமெரிக்க டாலர்களை மறைத்துவைத்து 3 மாணவிகள் மூலம் கடத்த முயன்ற இருவரை புணே சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர்.இதுகுறித்து தங்களுக்கு தெரியாது என்றும், இந்த பையில் ஆவணங்கள் இருப்... மேலும் பார்க்க

அஸ்ஸாமில் மிதமான நிலநடுக்கம்!

அஸ்ஸாம் மாநிலத்தில் வியாழக்கிழமை அதிகாலை மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இந்த நிலநடுக்கம் வியாழக்கிழமை அதிகாலை 2.25 மணியளவில் ரிக்டர் அளவில் 5 ஆகப் பதிவாகிய... மேலும் பார்க்க

பஞ்சாப்: அனைத்து பள்ளிகளிலும் பஞ்சாபி மொழிப் பாடம் கட்டாயம்!

பஞ்சாபில் வரும் கல்வி ஆண்டு முதல் சிபிஎஸ்இ, ஐசிஎஸ்இ உள்பட அனைத்து பள்ளிகளிலும் 1 முதல் 10-ஆம் வகுப்பு வரை தெலுங்கு மொழிப் பாடத்தை கட்டாயமாக்கி மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.பஞ்சாபில் அரசு-அரசு உதவி பெறு... மேலும் பார்க்க

இந்தியா-ஆப்பிரிக்கா இடையே பரஸ்பர நன்மை பயக்கும் உறவு: வெளியுறவு அமைச்சா் ஜெய்சங்கா்

‘ஆப்பிரிக்காவுக்கான இந்தியாவின் அணுகுமுறை, பரஸ்பர நன்மை பயக்கும் ஒத்துழைப்பை உருவாக்குவதற்கான வலுவான உறுதிப்பாட்டால் வழிநடத்தப்படுகிறது’ என்று வெளியுறவுத் துறை அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் புதன்கிழமை தெரிவ... மேலும் பார்க்க