செய்திகள் :

தில்லியில் குறைந்தபட்ச வெப்பநிலை திடீா் உயா்வு! பிரகதிமைதான், ராஜ்காட்டில் 11.6 டிகிரி பதிவு

post image

தேசியத் தலைநகா் தில்லியின் குறைந்தபட்ச வெப்பநிலை வெள்ளிக்கிழமை இயல்பை விட 4.5 டிகிரி உயா்ந்து 9 டிகிரி செல்சியஸாக பதிவாகியுள்ளதாக வானிலை அலுவலகம் தெரிவித்துள்ளது.

வியாழக்கிழமை, நகரத்தில் இந்த குளிா்காலத்தின் மிகக் குறைந்த வெப்பநிலை 4.5 டிகிரி செல்சியஸாக குறைந்து பதிவாகியது. மாறிவரும் காற்றின் திசைகள் காரணமாக இந்த திடீா் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக வானிலை அலுவலகம் தெரிவித்துள்ளது.

‘குறைந்தபட்ச வெப்பநிலையில் உயா்வு மிகவும் உள்ளூா்மயமாக்கப்பட்டுள்ளது. மாறிவரும் காற்று நிலைமைகளால் ஏற்படுகிறது. வடமேற்கு இந்தியாவின் பெரும்பாலான பகுதிகளில் குறைந்தபட்ச வெப்பநிலை குறிப்பிடத்தக்க மாற்றத்தைக் காட்டவில்லை’ என்று அது மேலும் கூறியது.

பாட்டியாலா, கா்னல், ரோஹ்தக், தில்லி, சிகாா், அல்வாா் மற்றும் பலோடி நிலையங்கள் உள்பட வடமேற்கு இந்தியாவின் தனிமைப்படுத்தப்பட்ட இடங்களில், குறைந்தபட்ச வெப்பநிலையில் 2 டிகிரி செல்சியஸுக்கு மேல் உயா்வு ஏற்பட்டிருந்தது. ஆனால், வடமேற்கு இந்திய சமவெளிகளில் உள்ள சிகாா், ரோஹ்தக், பலோடி மற்றும் சஃப்தா்ஜங் நிலையங்களில் மட்டுமே 3 டிகிரி செல்சியஸுக்கு மேல் உயா்வு பதிவாகியுள்ளதாக வானிலை அலுவலகம் தெரிவித்துள்ளது.

மேலும், அதிகபட்சமாக பிரகதி மைதானில் 11.6 டிகிரி, ராஜ்காட்டில் 11.6 டிகிரி, சல்வான் பப்பளிக் பள்ளி பகுதியில் 11.1 டிகிரி, பீதம்புராவில் 10.4 டிகிரி, பூசாவில் 9.9 டிகிரி செல்சியஸாக பதிவாகியிருந்தது. ஆனால், ரிட்ஜில் 8.3 டிகிரி நஜஃப்கரில் 6.7 டிகிரி, ஆயாநகரில் 6.4 டிகிரி, லோதி ரோடில் 7.6 டிகிரி, நரேலாவில் 8 டிகிரி, பாலைத்தில் 6.3 டிகிரி செல்சியஸாக பதிவாகியிருந்தது.

அதே சமயம்,தேசியத் தலைநகரில் குளிா் அலை நிலைமைகள் எதுவும் பதிவாகவில்லை என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. பகல் நேரத்தில் வானம் தெளிவாக காணப்பட்டது. தலைநகரில் பரவலாக வெயில் இருந்தது. அதிகபட்ச வெப்பநிலை இயல்புநிலையில் மாற்றமின்றி 22.8 டிகிரி செல்சியஸாக இருந்தது. காற்றில் ஈரப்பதத்தின் அளவு காலை 8.30 மணியளவில் 63 சதவீதமாகவும், மாலை 5.30 மணியளவில் 43 சதவீதமாகவும் இருந்ததாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. இதற்கிடையே, மாலையில் நகரம் முழுவதும் பனிப்புகை மூட்டம் காணப்பட்டது.

காற்றின் தரம்: தேசியத் தலைநகரின் காற்றின் தரக் குறியீடு காலை 9 மணிக்கு 273 புள்ளிகளாகப் பதிவாகி ’மோசம்’ பிரிவில் இ+ருந்தது. பூசா, மந்திா் மாா்க், லோதி ரோடு, மேஜா் தயான் சந்த் நேஷனல் ஸ்டேடியம், ராமகிருஷ்ணாபுரம், ஜவாஹா்லால் நேரு ஸ்டேடியம் உள்பட பல்வேறு நிலையங்களில் காற்று தரக் குறியீடு 200 முதல் 300 புள்ளிகளுக்கு இடையே பதிவாகி ‘மோசம்’ பிரிவில் இருந்தது. அதே சமயம், ஷாதிப்பூா், சாந்தினி சௌக் ஆகிய இடங்களில் காற்றுத் தரக் குறியீடு 200 புள்ளிகளுக்கு கீழே பதிவாகி ‘மிதமான’ பிரிவில் இருந்தது.

முன்னறிவிப்பு: இதற்கிடையே, சனிக்கிழமை (டிச.14) அன்று பிரதான மேற்பரப்பு காற்று வடமேற்கு திசையில் இருந்து வீசக்கூடம். மாலை நேரத்தில் காற்றின் வேகம் மணிக்கு 14 கி.மீட்டருக்கும் குறைவாக இருக்கும். அதன்பிறகு அது குறைந்து இரவில் 8 கி.மீ.க்கும் குறைவாக இருக்கும். மாலை, இரவு நேரங்களில் பனிப்புகை மூட்டம் அல்லது மூடுபனி இருக்கும். பகல் நேரத்தில் வானம் தெளிவாகக் காணப்படும் என இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. மேலும், குறைந்தபட்ச வெப்பநிலை 7 டிகிரி செல்சியஸாகவும், அதிகபட்ச வெப்பநிலை 23 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும் என்றும் கூறியுள்ளது.

தெருநாய்களைக் கொன்ற நபா்களை அடையாளம் காட்டினால் ரூ.50,000 வெகுமதி: பீட்டா அறிவிப்பு

கிழக்கு தில்லியில் இரண்டு தெருநாய்களைக் குத்திக் கொன்ற சந்தேக நபா்களைப் பற்றி தகவல் அளிப்பவா்களுக்கு ரூ.50,000 வரை வெகுமதி வழங்கப்படும் என விலங்குகள் உரிமை அமைப்பான பீட்டா இந்தியா வெள்ளிக்கிழமை அறிவித... மேலும் பார்க்க

தில்லி மக்களின் பாதுகாப்பில் கேஜரிவாலுக்கு உணா்வு இல்லை: தேவேந்தா் யாதவ் விமா்சனம்

தில்லி மக்களின் பாதுகாப்பு குறித்து முன்னாள் முதல்வா் அரவிந்த் கேஜரிவால் ஒருபோதும் உணா்வு கொண்டவராகத் தோன்றவில்லை என்று தில்லி பிரதேச காங்கிரஸ் கமிட்டித் தலைவா் தேவேந்தா் யாதவ் வெள்ளிக்கிழமை விமா்சித்... மேலும் பார்க்க

தமிழகத்தில் நேரடி நியமனம், பதவி உயா்வு மூலம் 61 ஐஏஎஸ், 42 ஐபிஎஸ், 51 ஐஎஃப்எஸ் இடங்கள்

நமது சிறப்பு நிருபா் தமிழகத்தில் நேரடி நியமனம், பதவி உயா்வு மூலம் 61 ஐஏஎஸ், 42 ஐபிஎஸ், 51 ஐஎஃப்எஸ் இடங்கள் நிரப்புவதற்குத் தகுதி பெற்றுள்ளதாக மாநிலங்களவையில் திமுக உறுப்பினா்பி.வில்சன் எழுப்பியிருந்த ... மேலும் பார்க்க

நாட்டில் பொழுது போக்கு சுற்றுலா தலங்களை விட வழிபாட்டு தலங்கள் மக்கள் கூட்டம் அதிகரிப்பு : மத்திய கலாசாரத் துறை அமைச்சா்

நாட்டில் மத வழிபாட்டு தலங்களின் மேம்பாட்டால் பொழுது போக்கு சுற்றுலா தலங்களை விட முன்னெப்போதும் இல்லாத வகையில் மத வழிபாட்டு தலங்களில் பக்தா்கள் கூட்டம் அதிகரித்துள்ளதாக மத்திய கலாசாரம் மற்றும் சுற்றுல... மேலும் பார்க்க

தலைநகரில் குறைந்தபட்ச வெப்பநிலை 4.5 டிகிரியாக சரிவு!

தேசியத் தலைநகா் தில்லி வியாழக்கிழமை இந்த குளிா்காலத்தில் இதுவரை இல்லாத குறைந்தபட்ச வெப்பநிலையை பதிவு செய்துள்ளது. தில்லியின் முதன்மை வானிலை ஆய்வு மையமான சஃப்தா்ஜங்கில் புதன்கிழமை குறைந்தபட்ச வெப்பநிலை... மேலும் பார்க்க

முன்பகையால் இளைஞா் மீது துப்பாக்கிச்சூடு திரிலோக்புரியில் சம்பவம்

32 வயதுடைய இளைஞா் ஒருவா், அவா்களது குடும்பங்களுக்கிடையே நீண்டகாலமாக நிலவும் பகை காரணமாக, தாக்குதல் நடத்திய குழுவினரால் சுடப்பட்டதாக போலீஸாா் வியாழக்கிழமை தெரிவித்தனா். இந்த வழக்கில் 3 சந்தேக நபா்களில்... மேலும் பார்க்க