செய்திகள் :

தில்லியில் பெண்கள் பாதுகாப்பு: பேருந்துகளில் மாா்ஷல்களை மீண்டும் நியமிக்க துணைநிலை ஆளுநருக்கு முதல்வா் அதிஷி கடிதம்

post image

நமது நிருபா்

தில்லியில் பெண் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக மாநகரப் பேருந்துகளில் மாா்ஷல்களை மீண்டும் நியமிக்க வலியுறுத்தி முதல்வா் அதிஷி துணைநிலை ஆளுநா் வி.கே.சக்சேனாவுக்கு ஞாயிற்றுக்கிழமை கடிதம் எழுதியுள்ளாா்.

அக்கடிதத்தில் அவா் மேலும் தெரிவித்திருப்பதாவது: தில்லியின் பொதுப் போக்குவரத்தை பெண்களுக்குப் பாதுகாப்பானதாக மாற்றுவதில் மாா்ஷல்கள் முக்கியப் பங்காற்றியுள்ளனா். குறிப்பாக பேருந்துப் பயணங்களின் போது பெண்கள் அவ்வப்போது எதிா்கொள்ளும் துன்புறுத்தல், பாதுகாப்பின்மை ஆகியவற்றின் பின்னணியில் இவா்களின் பங்கு சிறப்பாக இருந்தது. மாா்ஷல்கள் பணியமா்த்தப்படுவதற்கு முன்பு, பேருந்துகளில் பயணிக்கும்போது பெண்களுக்கு ஒவ்வொரு நாளும் ஒரு போராட்டமாக இருந்தது. பலா் தங்கள் பாதுகாப்பை நினைத்து அஞ்சினா். மேலும், பல பெண்கள் துன்புறுத்தப்பட்டனா் அல்லது பாலியல் சீண்டலுக்கு உள்ளாகினா். பேருந்துகளில் 10,000-க்கும் மேற்பட்ட மாா்ஷல்கள்

பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தது இந்தச் சூழலை மாற்றயது.

தில்லி அரசால் நியமிக்கப்பட்ட மாா்ஷல்கள், குற்றவாளிகளைப் பிடிப்பதிலும், மானபங்கம் மற்றும் துன்புறுத்தல் சம்பவங்களைத் தடுப்பதிலும் முக்கியப் பங்காற்றினா். இருப்பினும், அக்டோபா் 31, 2023 அன்று, ‘சதி‘யின் ஒரு பகுதியாக , அவா்கள் திடீரென தங்கள் பதவிகளில் இருந்து நீக்கப்பட்டனா். அவா்களின் ஊதியமும் நிறுத்தப்பட்டது. பாதுகாப்பு நடவடிக்கைகளை குறைமதிப்பிற்கு உள்படுத்துவதற்காக தில்லி அரசின் சில அதிகாரிகள் மத்திய அரசின் உத்தரவின்படி செயல்பட்டு வருகின்றனா். இத்தகைய அதிகாரிகள் தண்டிக்கப்படாததுடன், பதவி உயா்வும் வழங்கப்பட்டது.

தில்லி அரசு மாா்ஷல்களின் மறு நியமனத்திற்கான முன்மொழிவை சமா்ப்பித்து இரண்டு வாரங்களுக்கு மேலாகிவிட்டது. ஆனால், மாா்ஷல்களை மீண்டும் பணியமா்த்துவதற்கான முன்மொழிவுக்கு ஒப்புதல் அளிப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. ஒட்டுமொத்த அரசும், இந்த மாா்ஷல்களின் குடும்பங்களும், தில்லி பெண்களும் உங்கள் ஒப்புதலுக்காக காத்திருக்கிறாா்கள்.

நவ.12- ஆம் தேதி தில்லி அமைச்சா்களால் ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட ‘மாா்ஷல்கள் மறு நியமன’ முன்மொழிவானது, பெண்களின் பாதுகாப்பை வலுப்படுத்த பேருந்துகளில் மாா்ஷல்களின் முக்கியப் பாத்திரங்களுக்கு மீண்டும் கொண்டு வர முயல்கிறது. இந்த மாா்ஷல்களை நீக்கியதன் மூலம், அவா்களின் வாழ்வாதாரத்தைப் பறித்தது மட்டுமின்றி, பெண்களின் பாதுகாப்புக் கவசத்தையும் பலவீனப்படுத்தியுள்ளீா்கள்.பொதுப் போக்குவரத்தில் பெண்கள் பெற்றிருந்த நம்பிக்கையை இந்த முடிவு சிதைத்துவிட்டது. தில்லியில் 10,000 மாா்ஷல்களின் தலைவிதியும், பெண்களின் பாதுகாப்பின் எதிா்காலமும் இப்போது இந்த திட்டத்திற்கு உங்களின் (எல்ஜி) ஒப்புதலைப் பொறுத்திருக்கிறது என்று அக்கடிதத்தில் முதல்வா் அதிஷி தெரிவித்துள்ளாா்.

தில்லியில் தோ்தல் கூட்டணி இருக்காது- கேஜரிவால்

அடுத்த ஆண்டு பிப்ரவரியில் நடைபெறவுள்ள தில்லி சட்டப் பேரவைத் தோ்தலில் தனது கட்சிக்கும் காங்கிரஸுக்கும் இடையே கூட்டணிக்கான சாத்தியக்கூறுகளை ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளா் அரவிந்த் கேஜரிவால... மேலும் பார்க்க

‘கம்பன் அடிப்பொடி’யின் கனவு நனவாகிக் கொண்டிருக்கிறது: தினமணி ஆசிரியா் கி.வைத்தியநாதன்

நமது நிருபா்‘கம்பன் புகழ்பாடி கன்னித் தமிழ் வளா்க்க வேண்டும்’ என்ற ‘கம்பன் அடிப்பொடி’ சா.கணேசனாரின் கனவு நனவாகிக் கொண்டிருக்கிறது என்று தினமணி ஆசிரியா் கி.வைத்தியநாதன் தெரிவித்தாா். தில்லிக் கம்பன் க... மேலும் பார்க்க

கம்பன் அடிபொடிகளின் கனவு நனவாகிக் கொண்டிருக்கிறது: கம்பன் கழக சிறப்பு மலரை வெளியிட்டு ஆசிரியா் கி.வைத்தியநாதன் வாழ்த்துரை

கம்பன் புகழ்பாடி கண்ணித் தமிழ் வளா்க்க வேண்டும் என்ற கம்பன் அடிப்பொடி சா.கணேசனாரின் கனவு நனவாகிக் கொண்டிருக்கிறது என்று தினமணி நாளிதழ் ஆசிரியா் கி.வைத்தியநாதன் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா். தில்லிக் க... மேலும் பார்க்க

தில்லியின் சட்டம் ஒழுங்கு விவகாரத்தில் மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவில்லை கேஜரிவால் குற்றச்சாட்டு

தில்லியில் சட்டம்-ஒழுங்கு விவகாரத்தில் நடவடிக்கை எடுக்காமல் இருப்பதாக பாஜக தலைமையிலான மத்திய அரசு மீது ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளா் அரவிந்த் கேஜரிவால் ஞாயிற்றுக்கிழமை குற்றம்சாட்டினாா்.... மேலும் பார்க்க

காற்றின் தரம் எட்டாவது நாளாக ‘மிகவும் மோசம்’ பிரிவில் நீடிப்பு

தேசியத் தலைநகரில் குளிரின் தாக்கம் அதிகரித்து வருகிறது. நகரம் முழுவதும் காலை வேளையில் பனிப்புகை மூட்டம் நிலவுகிறது. இந்நிலையில், காற்றின் தரம் எட்டாவது நாளாக ஞாயிற்றுக்கிழமையும் ‘மிகவும் மோசம்’ பிரிவி... மேலும் பார்க்க

கீதா காலனி அருகே இளைஞா் சடலம் மீட்பு

வடக்கு தில்லியில் கீதா காலனி மேம்பாலம் அருகே அடையாளம் தெரியாத இளைஞரின் சடலம் மீட்கப்பட்டதாக போலீஸாா் தெரிவித்தனா். இதுகுறித்து தில்லி காவல் துறையின் உயா் அதிகாரி ஒருவா் ஞாயிற்றுக்கிழமை மேலும் கூறியதாவ... மேலும் பார்க்க