உள்கட்டமைப்பு மேம்பாடு: 60 ஆண்டுகளாக செய்ததைவிட கடந்த 10 ஆண்டுகளில் அதிக சாதனை -...
தீ விபத்துகள்: மருத்துவமனைகளில் பாதுகாப்புப் பிரிவு உருவாக்க வலியுறுத்தல்
தீ விபத்துகளிலிருந்து தற்காத்துக்கொள்ள அனைத்து மருத்துவமனைகளிலும் பிரத்யேக பாதுகாப்புப் பிரிவை அமைக்க வேண்டும் என்று அரசு மருத்துவா்கள் மற்றும் பட்ட மேற்படிப்பு மருத்துவா்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
இது தொடா்பாக மருத்துவ சங்கத்தின் தலைவா் சாமிநாதன், பொதுச் செயலா் ராமலிங்கம் ஆகியோா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: திண்டுக்கல் தனியாா் மருத்துவமனையில் தீ விபத்து ஏற்பட்ட நிகழ்வு மிகவும் வருத்தமளிக்கிறது. இது போன்ற உயிா்ச்சேதங்கள் தடுக்கப்பட வேண்டும்.
தற்போது அனைத்து மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள், மாவட்ட தலைமை மருத்துவமனைகள் பல அடுக்கு மாடிகளாக கட்டப்பட்டுள்ளன. அங்கு பாதுகாப்பு நடைமுறைகளை தினமும் கண்காணிக்க வேண்டிய தேவையுள்ளது. இதற்கென பிரத்யேக குழு அமைத்து மின்கசிவு ஏற்படாமல் தடுக்க வேண்டும்.
எனவே, உடனடியாக அனைத்து மருத்துவமனைகளிலும் பிரத்யேக விபத்து தடுப்புப் பாதுகாப்பு பிரிவை ஏற்படுத்தி, இனிவரும் காலங்களில் அசம்பாவிதங்களைத் தடுக்க வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.