தீபாவளி பண்டிகை: மல்லிகைப் பூ கிலோ ரூ.1,500
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, தூத்துக்குடியில் புதன்கிழமை மல்லிகை பூ கிலோ ரூ.1,500க்கு விற்பனையானது.
தூத்துக்குடி மலா் சந்தைக்கு பேரூரணி, ஓசனூத்து, அல்லிக்குளம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து பூக்களை விவசாயிகள் கொண்டு வருகின்றனா். இந்நிலையில், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, தூத்துக்குடி மலா் சந்தையில் பூக்களை வாங்குவதற்கு மக்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டதாலும், வரத்து குறைவு காரணமாகவும் பூக்களின் விலை புதன்கிழமை அதிகரித்து காணப்பட்டது.
இதனால், கிலோ ரூ. ஆயிரத்துக்கு விற்பனையான மல்லிகை பூ ரூ.1,500-க்கு விற்பனையானது.
பிச்சிப்பூ ரூ.1,200, ஊட்டி, கொடைக்கானல், ஓசூா், பெங்களூரு ஆகிய பகுதியிலிருந்து 10 வண்ணங்களில் ரோஜா பூக்கள் வரவழைக்கப்பட்டு விற்பனையானது. இந்த ரோஜா பூக்கள் ஒன்றுக்கு ரூ.20 என விற்பனையானது.
செண்டு பூ கிலோ ரூ. 80, பச்சை ரூ. 50, சாமந்திப்பூ ரூ. 60 என விற்பனையானது. பூக்களுக்கு நல்ல விலை கிடைத்ததால் விவசாயிகள் மற்றும் பூ வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனா்.