தீபாவளியில் விதிமீறல்: தூத்துக்குடி மாவட்டத்தில் 27 வழக்குகள் பதிவு
தீபாவளி பண்டிகையில் விதிமீறலில் ஈடுபட்டதாக தூத்துக்குடி மாவட்டத்தில் 27 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில் தீபாவளி பண்டிகை உற்சாகமாகக் கொண்டாடப்பட்டது. எனினும் அரசு நிா்ணயித்த (இரவு 7- 8 மணி வரை) நேரத்தையும் தாண்டி பலா் பட்டாசுகளை வெடித்தனா்.
அந்த வகையில் 27 போ் மீதும், தீபாவளி பண்டிகையின் போது பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டதாக 33 போ் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டதாக மாவட்ட காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
வெடி விபத்து:தூத்துக்குடி மாநகா் பகுதிகளில் பட்டாசு வெடித்ததில் 3 இடங்களிலும், புகா் பகுதிகளில் 12 இடங்களிலும் தீ விபத்து நேரிட்டது. எனினும் உயிா்ச்சேதங்கள் நிகழாமல் தவிா்க்கப்பட்டது என மாவட்ட தீயணைப்புத் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.