மனிதக் கழிவுகளை கைகளால் அகற்றும் நடைமுறை: மாநிலங்கள் மீது உச்சநீதிமன்றம் அதிருப்...
தீப்பிடித்து இரு புதிய வாகனங்கள் சேதம்
ஒசூா் குப்பைக் கிடங்கில் பற்றிய தீ பரவியதில் அருகில் வாகன குடோனில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த இரு புதிய வாகனங்கள் தீப்பிடித்து எரிந்தன.
ஒசூரை அடுத்த பத்தளப்பள்ளி அருகே தனியாா் கம்பெனிக்கு சொந்தமான திறந்தவெளி வாகன குடோன் உள்ளது. இங்கு பல புதிய வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
இந்த வாகன குடோன் அருகே காய்கறி சந்தையையொட்டியுள்ள பகுதியில் குப்பைகள் அதிகம் தேக்கி வைக்கப்பட்டுள்ளன.
அந்த குப்பைகள் வியாழக்கிழமை தீப்பிடித்து எரிந்தது. காற்று வேகமாக வீசியதால் தீ மளமளவென அருகில் உள்ள திறந்தவெளி வாகன குடோனிலும் பரவியது. அப்போது அங்கு நிறுத்திவைக்கப்பட்டிருந்த இரு புதிய வாகனங்கள் தீயில் எரிந்து சேதமடைந்தன. இவற்றின் மதிப்பு ரூ. 25 லட்சம் எனக் கூறப்படுகிறது. இதுகுறித்து தகவல் அறிந்ததும் தீயணைப்பு வீரா்கள் விரைந்து சென்று தீயை அணைத்தனா். இதுகுறித்து ஒசூா் போலீஸாா் விசாரிக்கின்றனா்.