செய்திகள் :

தீர்ப்புகளில் செய்யறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தக் கூடாது: கேரள உயர்நீதிமன்றம்

post image

நீதிமன்ற தீர்ப்புகள், உத்தரவுகளில் செய்யறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்தக் கூடாது என்று நீதிமன்றங்களுக்கு கேரள உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

செய்யறிவு தொழில்நுட்பம்(ஏ.ஐ.) இப்போது அனைத்துத் துறைகளிலும் புகுத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில் ஏஐ பயன்பாடு தொடர்பாக நீதிமன்றங்கள் மற்றும் நீதித்துறை அதிகாரிகளுக்கு கேரள உயர் நீதிமன்றம் சிறப்பு வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. ஏஐ பயன்பாடு தொடர்பாக ஒரு நீதிமன்றம் வழிகாட்டுதல்களை வெளியிடுவது இதுவே முதல்முறை என்று கூறப்படுகிறது.

அதன்படி, நீதிமன்ற தீர்ப்புகள் மற்றும் உத்தரவுகளைப் பிறப்பிக்க சாட்ஜிபிடி, டீப்சீக் போன்ற க்ளவுடு செய்யறிவு தொழில்நுட்பக் கருவிகளைப் பயன்படுத்தக்கூடாது என்றும் இந்த வழிகாட்டுதல்களை மீறினால் கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் கேரள நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அதாவது ஒரு வழக்கில் தீர்ப்பு முடிவுகளை ஆராயவோ அல்லது தீர்ப்பு உத்தரவுகளை தயார் செய்யவோ ஏஐ கருவிகளைப் பயன்படுத்த வேண்டாம், ஏனெனில் அதில் பிழைகள் ஏற்பட வாய்ப்புள்ளது, மேலும் தகவல்கள் வெளியே கசிய வாய்ப்புள்ளது என்று கூறியுள்ளது.

அதேநேரத்தில் "ஏஐ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதில் முறையான பயிற்சி வேண்டும். நீதித்துறையால் அங்கீகரிக்கப்பட்ட ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தலாம். அதுவும் தீர்ப்புகளுக்கு பயன்படுத்தக் கூடாது. இதற்காக நீதித்துறை நடத்தும் பயிற்சிகளில் கலந்துகொண்டு அதுபற்றி தெரிந்துகொள்ளலாம். ஒருவேளை ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தினாலும் அவற்றை ஒருமுறை சரிபார்க்க வேண்டும். அங்கீகரிக்கப்பட்ட ஏஐ கருவிகளைப் பயன்படுத்தும்போது ஏதேனும் பிரச்னை ஏற்பட்டால் உடனடியாக ஐடி துறைக்குத் தகவல் தெரிவிக்க வேண்டும்" என்று கூறியுள்ளது.

The Kerala High Court has ordered courts not to use artificial intelligence tools in court judgments and orders.

இதையும் படிக்க | சொல்லப் போனால்... ஒரு உண்மை தெரிஞ்சாகணும் சாமி!

குடியரசு துணைத் தலைவர் ஜகதீப் தன்கருடன் கேஜரிவால் சந்திப்பு

தில்லியில் குடியரசு துணைத் தலைவர் ஜகதீப் தன்கரை தில்லி முன்னாள் முதல்வரும் ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கேரிவால் சந்தித்தார். ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இந்த சந்திப்பின்போது மாநிலங்க... மேலும் பார்க்க

கர்நாடகத்தில் 100க்கும் மேற்பட்ட பெண்கள் கொன்று புதைக்கப்பட்ட விவகாரம்: சிறப்பு புலனாய்வுக் குழு அமைத்து உத்தரவு!

மங்களூரு: மங்களூரு அருகேயுள்ள தர்மஸ்தலா பகுதியில் மண்ணுக்குள் சுமார் 100 பெண்கள் கொன்று புதைக்கப்பட்டதாகக் கூறப்படும் விவகாரத்தில் அடுத்தடுத்து சில திருப்பங்கள் ஏற்பட்டுள்ளன.தர்மஸ்தலாவில் அமைந்துள்ள ஸ... மேலும் பார்க்க

நைஜரில் பயங்கரவாதிகளால் இந்தியர் கடத்தல்! மத்திய அரசுக்கு குடும்பத்தினர் கோரிக்கை

நைஜரில் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட இந்தியரை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய அரசுக்கு பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.நைஜரின் டோசோ பகுதியில், கடந்த ஜூலை 15 ஆம் தேதி... மேலும் பார்க்க

அமா்நாத் யாத்திரை: ஜம்முவிலிருந்து 20ஆவது குழு புறப்பட்டது !

அமர்நாத் குகைக் கோயிலுக்கு 4,388 பேர் கொண்ட 20 ஆவது குழு ஞாயிற்றுக்கிழமை புறப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.காஷ்மீரின் இமயமலையில் 3,880 மீட்டா் உயரத்தில் அமைந்துள்ள அமா்நாத் குகைக் கோயிலில் இயற்கையா... மேலும் பார்க்க

அகமதாபாத்தில் வீட்டில் இருந்து தம்பதியர், 3 குழந்தைகளின் சடலங்கள் மீட்பு !

அகமதாபாத்தில் தம்பதியர் மற்றும் அவர்களது 3 குழந்தைகள் வீட்டில் இருந்து சடலங்களாக கண்டெடுக்கப்பட்டனர்.குஜராத்தின் அகமதாபாத் மாவட்டத்தில் வீடு ஒன்றில் இருந்து தம்பதியினரின் உடல்களும், அவர்களது மூன்று கு... மேலும் பார்க்க

பள்ளிப்பேருந்திலிருந்து தூக்கி வீசப்பட்ட 2-ஆம் வகுப்பு மாணவன் பின்பக்க சக்கரம் ஏறியதில் பலி!

பெங்களூரு: பள்ளிப்பேருந்தில் கதவு சரியாக மூடாததால் பேருந்திலிருந்து கீழே விழுந்த சிறுவன் மீது பேருந்து சக்கரம் ஏறி இறங்கியதில் உயிரிழந்தார்.பெங்களூரிலுள்ள ஒரு பள்ளியில் இரண்டாம் வகுப்பு பயின்று வந்த எ... மேலும் பார்க்க