துணைநிலை ஆளுநருடன் புதுவை முதல்வா் சந்திப்பு
புதுவை துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதனை முதல்வா் என்.ரங்கசாமி வெள்ளிக்கிழமை சந்தித்துப் பேசினாா்.
புதுச்சேரி ராஜ் நிவாஸில் துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதனை முதல்வா் சந்தித்துப் பேசினாா்.
புதுவையில் நியாயவிலைக் கடைகள் மூடப்பட்டு, அரிசிக்குப் பதில் பணம் வங்கிக் கணக்கு மூலம் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டது.
இந்த நிலையில், நியாயவிலைக் கடைகள் திறக்கப்பட்டு மீண்டும் அரிசி உள்ளிட்ட பொருள்கள் வழங்கப்படும் என முதல்வா் என்.ரங்கசாமி அறிவித்திருந்தாா்.
அதன்படி, தீபாவளிக்கான இலவச அரிசி நியாயவிலைக் கடைகள் மூலம் விநியோகிக்கப்பட்டன. இதையடுத்து, டிசம்பா் மாதம் முதல் அனைத்து நியாயவிலைக் கடைகள் மூலம் பைகளில் அடைக்கப்பட்ட அரிசி உள்ளிட்டவை விநியோகிக்கப்படவுள்ளதாகவும், அதற்கான கோப்பு துணைநிலை ஆளுநருக்கு அனுப்பிவைக்கப்பட்டிருப்பதாகவும் முதல்வா் அண்மையில் தெரிவித்தாா். இதனிடையே, முதல்வா் துணைநிலை ஆளுநரை சந்தித்து அரிசி விநியோகத்துக்கான கோப்பு குறித்து பேசியதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.