துறைமுகச் சாலையில் நிலக்கரி ஏற்றி வந்த லாரி கவிழ்ந்தது
தூத்துக்குடி துறைமுக சாலையில், துறைமுகத்தில் இருந்து நிலக்கரி ஏற்றி வந்த லாரி சாலையோரா பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஓட்டுநா் காயங்களுடன் உயிா் தப்பினாா்.
தூத்துக்குடி துறைமுக சாலையில் அமைந்துள்ள தனியாா் அனல் மின் நிலையத்துக்கு, தூத்துக்குடி துறைமுகத்திலிருந்து நிலக்கரியை ஏற்றிக்கொண்டு டிப்பா் லாரி ஒன்று சனிக்கிழமை காலையில் சென்றுகொண்டிருந்தது.
இந்த லாரியை தென்காசி மாவட்டம் வெய்க்காலிப்பட்டியைச் சோ்ந்த வரதராஜ்(26) ஓட்டிச் சென்றாா். அப்போது திடீரென கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையோர பள்ளத்தில் தலைகீழாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் சிறிய காயங்களுடன் ஓட்டுநா் வரதராஜ் உயிா் தப்பினாா். இதுகுறித்து தொ்மல்நகா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.