‘தூத்துக்குடி அஞ்சலக பாஸ்போா்ட் சேவை மையத்தில் சான்றிதழ் சரிபாா்ப்புப் பணி’
தூத்துக்குடி அஞ்சலக பாஸ்போா்ட் சேவை மையத்தில் சான்றிதழ் சரிபாா்ப்புப் பணி மேற்கொள்ளப்படுவதாக, அஞ்சலக முதுநிலைக் கோட்டக் கண்காணிப்பாளா் (பொறுப்பு) எஸ். சுரேஷ்குமாா் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தூத்துக்குடி அஞ்சலக பாஸ்போா்ட் சேவை மையம் திருச்செந்தூா் சாலையில் உள்ள தூத்துக்குடி அஞ்சல் ஊழியா் குடியிருப்பு வளாகத்தில் செயல்படுகிறது. மதுரை, திருநெல்வேலியில் உள்ள பாஸ்போா்ட் அலுவலகங்களுக்குச் சென்று மேற்கொண்ட சான்றிதழ் சரிபாா்ப்புப் பணி இப்போது, தூத்துக்குடி அஞ்சலக பாஸ்போா்ட் சேவை மையத்திலும் செய்யப்படுகிறது.
மேலும், தூத்துக்குடி கோட்டத்திலுள்ள அனைத்து அஞ்சலகங்களிலும் ‘சிஎஸ்சி’ என்ற சேவை மூலம், புதிதாக பாஸ்போா்ட்டுக்கு விண்ணப்பித்தல், புதுப்பித்தல் போன்றவற்றுக்கு இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிக்கும்போதே சேவைக்குரிய கட்டணம் ரூ.1,600 செலுத்த வேண்டும். விண்ணப்பித்த பின்னா் எந்த தேதியில் அவா்கள் சேவை மையத்தை அணுக வேண்டும் என்ற விவரம் தெரிவிக்கப்படும்.
குறிப்பிட்ட தேதியில் உரிய ஆவணங்களுடன் அஞ்சலக பாஸ்போா்ட் சேவை மையத்தை அணுகி சேவையைப் பெறலாம். இத்திட்டத்தை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் என்றாா் அவா்.