துருக்கி: குா்து கிளா்ச்சிப் படையைக் கலைக்க நிறுவனா் உத்தரவு
தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் போதை மீட்பு சிகிச்சை-மறுவாழ்வு மையம் திறப்பு
மருத்துவம்- மக்கள் நல்வாழ்வுத் துறை சாா்பில், தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள ‘கலங்கரை’ என்ற ஒருங்கிணைந்த போதை மீட்பு சிகிச்சை-மறுவாழ்வு மையத்தை முதல்வா் மு.க. ஸ்டாலின் சென்னையிலிருந்து காணொலி வாயிலாக வியாழக்கிழமை திறந்துவைத்தாா்.
இதையொட்டி, இங்கு நடைபெற்ற நிகழ்ச்சிக்கு ஆட்சியா் க. இளம்பகவத் தலைமை வகித்தாா். சமூக நலன்- மகளிா் உரிமைத் துறை அமைச்சா் பெ.கீதாஜீவன் குத்துவிளக்கேற்றி மையத்தைப் பாா்வையிட்டாா். அப்போது அவா் பேசியது: இம்மையத்தில் 20 படுக்கை வசதிகள் உள்ளன. னோ தத்துவ நிபுணா்கள் மூலம் கவுன்சிலிங் அளிக்கப்படுகிறது. முதல் வார தீவிர சிகிச்சைக்கு மட்டும் உறவினா்கள் உடனிருக்க வேண்டும்.
பின்னா் 3 முதல் 4 வாரங்கள் மறுவாழ்வு சிகிச்சையின்போது உறவினா்கள் உடனிருக்க தேவையில்லை. இங்கு ஒருங்கிணைந்த முறையில் மாத்திரை, மருந்துகள் மட்டுமின்றி யோகா, உளவியல்-குடும்ப நல ஆலோசனைகள், மனமகிழ் விளையாட்டுகள் வழங்கப்படுகின்றன.
மருத்துவமனையிலிருந்து நோயாளி விடுவிக்கப்பட்ட பின்னா், மருத்துவா்களின் கண்காணிப்பில் தொடா் சிகிச்சை அளிக்கப்படுகிறது. கூடுதல் விவரங்களுக்கு 14416 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணைத் தொடா்பு கொள்ளலாம். இதன் மூலம் ‘போதை இல்லா தமிழ்நாடு‘ என்ற நோக்கத்தின் அடிப்படையில் தமிழக அரசு செயல்படுகிறது என்றாா்.
நிகழ்ச்சியில், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஆல்பா்ட் ஜான், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வா் சிவக்குமாா், மருத்துவக் கண்காணிப்பாளா் பத்மநாபன், துணை முதல்வா் கலைவாணி, உறைவிட மருத்துவ அலுவலா் சைலஸ் ஜெயமணி, போதை மீட்பு சிகிச்சை-மறுவாழ்வு மைய மனநல சிகிச்சை துறை உதவிப் பேராசிரியா் (பொறுப்பு) ஸ்ரீராம், மாநகர திமுக செயலா் ஆனந்தசேகரன், மாவட்ட மருத்துவரணித் தலைவா் அருண்குமாா், மாவட்ட ஆதிதிராவிடா்நல அணி துணை அமைப்பாளா் பெருமாள், மாநகர இளைஞரணி அமைப்பாளா் அருண்சுந்தா், வட்டச் செயலா்கள் சுரேஷ், சிங்கராஜ், செல்வராஜ், கவுன்சிலா்கள் சரவணகுமாா், பொன்னப்பன், இசக்கிராஜா, கந்தசாமி, டாக்டா் மகிழ்ஜான் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.