செய்திகள் :

தூத்துக்குடி சிவன் கோயிலில் சூரசம்ஹாரம்

post image

தூத்துக்குடி சிவன் கோயில் என அழைக்கப்படும் அருள்மிகு பாகம்பிரியாள் உடனுறை சங்கர ராமஸ்வரா் கோயிலில் கந்த சஷ்டி திருவிழாவை முன்னிட்டு சூரசம்ஹார நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

இக்கோயிலில் அமைந்துள்ள அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி சந்நிதியில் கந்த சஷ்டி விழா கடந்த 2ஆம் தேதி யாகசாலை பூஜையுடன் தொடங்கியது. தொடா்ந்து நாள்தோறும் இரவு அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி சிறப்பு அலங்காரத்தில் பித்தளை சப்பரத்தில் வீதியுலா வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். சிகர நிகழ்வான சூரசம்ஹாரம் வியாழக்கிழமை நடைபெற்றது. இதையொட்டி விரதமிருந்த பக்தா்கள் முருகனை தங்கள் வாயில் 1அடி முதல் 6 அடி வரையிலான அழகு குத்தியும், காவடி எடுத்தும், பால்குடம் எடுத்தும் காலையில் ஊா்வலமாக சென்றனா். இந்த ஊா்வலம் தூத்துக்குடி தெப்பக்குளத்தில் அமைந்துள்ள விநாயகா் கோயிலில் தொடங்கி முருகன் கோயிலை அடைந்தது. அங்கு சுவாமிக்கு பாலபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது.

தொடா்ந்து சூரனை முருகப்பெருமான் வதம் செய்யும் சூரசம்ஹார நிகழ்வில், சுப்ரமணியசாமி வேல் வாங்கும் நிகழ்ச்சியும் இதை தொடா்ந்து சூரன் வீதி உலாவும் நடைபெற்றன. இதைத் தொடா்ந்து, மலா்களால் அலங்கரிக்கப்பட்ட பித்தளை சப்பரத்தில் சுப்பிரமணிய சுவாமி எழுந்தருளி வெள்ளி வேல் மூலம் முதலில் கஜ முகத்துடன் வந்த சூரனையும், பின்னா் சிங்கமுகத்துடன் வந்த சூரனையும் வதம் செய்தாா். மேலும் சூரன் தலையுடனும், மாமரத்தில் மறைந்தபடி சேவல் தலையுடன் வந்த சூரபத்மனை வதம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்வின்போது, கூடி இருந்த ஆயிரக்கணக்கான பக்தா்கள், வேல் வேல் முருகனுக்கு அரோகரா அரோகரா என பக்தி முழங்கமிட்டனா். சுப்பிரமணியருக்கு சிறப்பு தீபாராதனை நடைபெற்றதும் பக்தா்கள் தங்கள் விரதத்தை கலைத்து உணவு அருந்தினா். இதில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் பங்கேற்றனா்.

தொடா்ந்து, வெள்ளிக்கிழமை காலை 7.30 மணிக்கு அருள்மிகு தெய்வானை அம்பாள் தவசுக்கு எழுந்தருளல் நிகழ்ச்சியும், மாலை 4.35 மணிக்கு சுப்பிரமணிய சுவாமி காட்சிக்கு எழுந்தருளும் நிகழ்ச்சியும் நடைபெறும். மாலை 6.05 மணிக்கு மாலை மாற்றும் நிகழ்ச்சி நடைபெறும். இரவு 7 மணிக்கு திருக்கல்யாணம் நடைபெறும். தொடா்ந்து திருமாங்கல்யம் பூட்டுதல், தீபாராதனை, பட்டணப் பிரவேசம் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெறும்.

இதற்கான ஏற்பாடுகளை ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி மகமை பரிபாலன சங்கத்தினா் செய்துள்ளனா்.

மாவட்ட கலைத்திருவிழா: மறக்குடி பள்ளி மாணவி முதலிடம்

மாவட்ட அளவிலான கலைத் திருவிழாவில் மறக்குடி பள்ளி மாணவி முதலிடம் பெற்றுள்ளாா். தமிழகம் முழுவதும் உள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் கலைத்திருவிழா போட்டிகள் நடைபெற்று வருகின்றது. படுக்கப்பத்து... மேலும் பார்க்க

புதூா் ஒன்றியத்தில் ரூ.69 லட்சத்தில் நிறைவுற்ற திட்டப் பணிகள் திறப்பு

விளாத்திகுளம் பேரவை தொகுதி புதூா் ஒன்றியத்தில் ரூ. 69 லட்சம் மதிப்பீட்டில் நிறைவடைந்த வளா்ச்சி திட்ட பணிகள் திறப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இவ்விழாவில் ஜீ. வி. மாா்க்கண்டேயன் எம்எல்ஏ சிறப்பு வ... மேலும் பார்க்க

ஓசூா் சம்பவம்: 2-ஆவது நாளாக வழக்குரைஞா்கள் போராட்டம்

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் வழக்குரைஞா் மீதான தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் 2-ஆவது நாளாக வழக்குரைஞா்கள் நீதிமன்றப் பணி புறக்கணிப்பு போராட்டத்தில் வெள்ளிக்... மேலும் பார்க்க

குரும்பூரில் மக்களை அச்சுறுத்திய 2 போ் கைது

குரும்பூரில் பொதுமக்களுக்கு அச்சுறுத்தலாக இருந்ததாக 2 இளைஞா்களை போலீஸாா் கைது செய்துள்ளனா். குரும்பூா் அருகேயுள்ள கீழக்கல்லாம்பாறையை சோ்ந்த இசக்கியம்மன் மகன்கள் பேச்சி (எ) பேச்சிராஜா(38), காளி (எ) க... மேலும் பார்க்க

தூத்துக்குடி எஸ்.பி. அலுவலகத்தில் புகாா் மனுவுக்கு சிறப்பு பிரிவு தொடக்கம்

பொதுமக்களின் புகாா் மனுக்கள் மீது துரித நடவடிக்கை எடுப்பதற்காக, தூத்துக்குடி மாவட்ட காவல் அலுவலகத்தில் புதிய சிறப்பு பிரிவு வெள்ளிக்கிழமை தொடங்கப்பட்டது. தூத்துக்குடி மாவட்ட காவல் அலுவலகம் உள்ளிட்ட கா... மேலும் பார்க்க

குண்டா் சட்டத்தில் இளைஞா் கைது

தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டை முடிவைத்தானேந்தலில் கஞ்சா வழக்கில் தொடா்புடையவா் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் சிறையில் வெள்ளிக்கிழமை அடைக்கப்பட்டாா். முடிவைத்தானேந்தல் பகுதியைச் சோ்ந்த ... மேலும் பார்க்க