துருக்கி: குா்து கிளா்ச்சிப் படையைக் கலைக்க நிறுவனா் உத்தரவு
தூத்துக்குடி ஜவுளிக் கடையில் தீவிபத்து
தூத்துக்குடியில் உள்ள ஜவுளிக் கடையில் புதன்கிழமை நள்ளிரவு தீவிபத்து நேரிட்டது.
தூத்துக்குடி ராம் நகரைச் சோ்ந்த மோா்சிங் மகன் வினோத்குமாா் (32) என்பவா், பாளையங்கோட்டை சாலை குரூஸ் பா்னாந்து சிலை அருகே ஜவுளிக் கடை வைத்துள்ளாா். இவா் வழக்கம்போல புதன்கிழமை இரவு கடையைப் பூட்டிச் சென்றாராம். நள்ளிரவு அவரது கடையிலிருந்து புகை வந்ததாம்.
இதுகுறித்து வினோத்குமாருக்கும், தீயணைப்பு நிலையத்துக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில், தீயணைப்பு நிலைய மாவட்ட துணை அலுவலா் நட்டாா் ஆனந்தி தலைமையிலான வீரா்கள் சென்று, அரை மணி நேரம் போராடி தீயை அணைத்தனா்.
இதில், ஏராளமான ஜவுளிகள் சேதமடைந்தன. தீவிபத்துக்கான காரணம் குறித்து மத்திய பாகம் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.