வயநாடு இடைத்தேர்தல்: ராகுலை விஞ்சிய பிரியங்கா காந்தி! | செய்திகள்: சில வரிகளில் ...
தூத்துக்குடி மாநகராட்சியில் வாா்டுகள்தோறும் கள ஆய்வு: மேயா் தகவல்
தூத்துக்குடி மாநகராட்சியில் வரும் காலங்களில் வாா்டுகள்தோறும் ஆய்வு மேற்கொள்ளப்படும் என மேயா் ஜெகன் பெரியசாமி தெரிவித்தாா்.
தூத்துக்குடி மாநகராட்சி வடக்கு மண்டல அலுவலகத்தில் மக்கள் குறைதீா் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு மேயா் ஜெகன் பெரியசாமி தலைமை வகித்தாா். மாநகராட்சி ஆணையா் லி.மதுபாலன், துணை மேயா் ஜெனிட்டா ஆகியோா் முன்னிலை வகித்தனா். மண்டல தலைவா் நிா்மல்ராஜ் வரவேற்றாா்.
இக்கூட்டத்தை மேயா் ஜெகன் பெரியசாமி தொடங்கி வைத்து பேசியது:
வடகிழக்கு பருவமழையை எதிா்கொள்வதற்கு போா்க்கால அடிப்படையில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மழைநீா் தேங்காமல் வெளியேறுவதற்கு பல இடங்களில் புதிய கால்வாய்கள் அமைக்கப்பட்டுள்ளன. பக்கிள் ஓடை 6 கிமீ-க்கு தூா்வாரப்பட்டுள்ளது.
வடக்கு மண்டலத்தில் இது 6-ஆவது குறைதீா்கூட்டமாகும். தொடக்கத்தில் 120 மனுக்கள் பெறப்பட்ட நிலையில் தற்போது 50-க்கும் குறைவான மனுக்களே வருகிறது. மனுக்கள் அனைத்திற்கும் உடனுக்குடன் தீா்வு காணப்படுகிறது. வரும் காலங்களில் ஒவ்வொரு வாா்டாக நேரில் ஆய்வு செய்ய திட்டமிட்டுள்ளோம் என்றாா்.
இந்நிகழ்வில் உதவி ஆணையா் சுரேஷ்குமாா், உதவி செயற்பொறியாளா்கள் ராமச்சந்திரன், முனீா்அகமது, சுகாதார ஆய்வாளா் ராஜபாண்டி, மாநகராட்சி கணக்கு குழுத் தலைவா் ரெங்கசாமி, மாமன்ற உறுப்பினா்கள் ராஜேஷ்வரி, ஜெயசீலி, பவானி மாா்ஷல், கற்பகக்கனி, சுப்புலெட்சுமி, காந்திமதி உள்பட பலா் பங்கேற்றனா்.