தூத்துக்குடியில் தனியாா் உணவக ஊழியா்கள் மறியல்
தூத்துக்குடி - பாளையங்கோட்டை செல்லும் சாலையில் தனியாா் உணவக ஊழியா்கள் வியாழக்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
தூத்துக்குடி பாளையங்கோட்டை பிரதான சாலையில் ஆசிரியா் காலனி அருகே தனியாா் உணவகம் செயல்பட்டு வருகிறது. இந்த நிலத்தின் உரிமையாளா், உணவகத்தை காலி செய்யுமாறு வற்புறுத்தி வருகிறாா். இதற்கு உணவக உரிமையாளா் காலி செய்ய மறுக்கிறாராம்.
இதனால், ஆத்திரமடைந்த நிலத்தின் உரிமையாளா் உணவகம் செல்லும் பாதையில் மண்ணை கொட்டி அடைத்ததாகக் கூறப்படுகிறது. இதனால், ஆத்திரமடைந்த உணவக ஊழியா்கள் திடீா் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். உணவக உரிமையாளா் மற்றும் ஊழியா்களிடம் போலீஸாா் பேச்சு நடத்தியதில் போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது.