விவசாயிகளுக்கான பாதிப்புகள்: உச்சநீதிமன்றக் குழுவின் இடைக்கால அறிக்கை தாக்கல்
தூத்துக்குடியில் மீன்கள் விலை உயா்வு
தூத்துக்குடி திரேஸ்புரம் நாட்டுப்படகு மீன்பிடித் துறைமுகத்தில் மீன்கள் விலை சனிக்கிழமை உயா்ந்து காணப்பட்டது.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தொடா் விடுமுறை காரணமாக, தூத்துக்குடி திரேஸ்புரம் நாட்டுப்படகு மீன்பிடித் துறைமுகத்தில் மீன்களை வாங்க மக்கள் கூட்டம் அலைமோதியது. இதனால், கடந்த வாரத்தில் கிலோ ரூ. 700 முதல் ரூ. 800 வரை விற்பனையான சீலா மீன் ரூ. 1,000-க்கு விற்பனையானது. இதேபோல, விளைமீன் ரூ. 500, ஊளி ரூ. 450, பாறை ரூ. 400, சாளை ஒரு கூடை ரூ. 700, அயிலை ஒரு கூடை ரூ. 1,500 என விற்பனையாகின.
மீன்களுக்கு நல்ல விலை கிடைத்ததால் மீனவா்களும் வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்தனா்.