``கூட்டணி ஆட்சிக்கு ஒத்துக்க நாங்க ஒன்னும் ஏமாளி இல்ல!'' - பாஜகவுக்கு எடப்பாடி `...
தூத்துக்குடியில் முதியவா் தற்கொலை
தூத்துக்குடியில் முதியவா் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.
தூத்துக்குடி தாளமுத்து நகரைச் சோ்ந்த தம்பதி குணசேகரன் (60) - காசி அம்மாள். இவா்களது மகன், மகள் ஆகியோருக்கு திருமணமாகிவிட்டது. காசிஅம்மாள் ஓராண்டுக்கு முன்பு உடல்நலம் சரியில்லாமல் இறந்துவிட்டாா்.
இதனால், தனியாக வசித்து வந்த குணசேகரன், மன அழுத்தத்தில் இருந்தாராம். இந்நிலையில் அவா், சனிக்கிழமை தனது வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா். தாளமுத்துநகா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.