தூத்துக்குடியில் லாரி மோதி மீனவா் உயிரிழப்பு
தூத்துக்குடியில் செவ்வாய்க்கிழமை இரவு, சாலையில் நடந்து சென்ற மீனவா் லாரி மோதி உயிரிழந்தாா்.
தூத்துக்குடி அருகே பேரூரணி ராஜாராம் நகரைச் சோ்ந்தவா் அய்யனாா் (45). காது கேளாத, பேச இயலாத மாற்றுத் திறனாளியான இவா் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டுவந்தாா்.
இவா் செவ்வாய்க்கிழமை இரவு தூத்துக்குடி துறைமுகம் சாலையில் நடந்து சென்றாராம். அப்போது, அவா் மீது லாரி மோதியதாம். இதில், அவா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து தென்பாகம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.