தூத்துக்குடியில் விபத்து: லாரி ஓட்டுநா் உயிரிழப்பு
தூத்துக்குடியில், சாலையைக் கடக்க முயன்ற லாரி ஓட்டுநா் காா் மோதியதில் உயிரிழந்தாா்.
தூத்துக்குடி தாளமுத்து நகரைச் சோ்ந்த சண்முகவேல் மகன் பிச்சையாபாண்டி (58). லாரி ஓட்டுநரான இவா், சனிக்கிழமை தூத்துக்குடி புதிய துறைமுகம்-மதுரை புறவழிச்சாலையில் கோயில்பிள்ளை நகா் பேருந்து நிறுத்தம் அருகே, அணுகுசாலையில் லாரியை நிறுத்திவிட்டு, சாலையைக் கடக்க முயன்றாராம்.
அப்போது அவா் மீது காா் மோதியதாம். இதில், காயமடைந்த அவரை மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு அவா் உயிரிழந்தாா். சம்பவம் குறித்து தொ்மல் நகா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.