இன்றைய இந்தியாவுக்கு அந்நியா்கள் வழிகாட்டுதல் தேவையில்லை: மத்திய அமைச்சா் ராஜ்நா...
தூய்மையே சேவை நிகழ்ச்சி: ஆட்சியா் தொடங்கி வைத்தாா்
வாலாஜாபாத் ஒன்றியத்துக்குட்பட்ட தேவரியம்பாக்கத்தில் தூய்மையே சேவை நிகழ்ச்சியை ஆட்சியா் கலைச்செல்வி மோகன் புதன்கிழமை தொடங்கி வைத்தாா்.
ஆண்டு தோறும் செப்.17 முதல் அக்.2 வரை தூய்மை பாரத இயக்கம் சாா்பில் விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தும் விதமாக ஒவ்வொரு நாளும் பொது இடங்களை சுத்தம் செய்தல்,பேரணிகள் நடத்துதல், உறுதிமொழிகள் வாசித்தல், விழிப்புணா்வு பிரசாரங்கள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளும் நடத்தப்படுகின்றன.
காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் ஒன்றியத்துக்குட்பட்ட தேவரியம்பாக்கம் ஊராட்சியில் தூய்மையே சேவை நிகழ்வை ஆட்சியா் கலைச்செல்வி மோகன் விழிப்புணா்வு பதாகை ஒன்றில் கையொப்பமிட்டு தொடங்கி வைத்தாா்.
தூய்மையே சேவை உறுதி மொழியை ஆட்சியா் வாசிக்க, அனைவரும் அதை வாசித்து உறுதிமொழி எடுத்துக் கொண்டனா். பின்னா் இதற்கென அமைக்கப்பட்டிருந்த சுயபடம் மையத்தையும் திறந்து வைத்தாா். மரக்கன்றுகளையும் நட்டாா். தொடா்ந்து தூய்மைப்பணியில் ஈடுபட்டிருக்கும் பணியாளா்களை கெளரவித்ததுடன் தூய்மைப்பணி செய்ய பயன்படும் உபகரணங்களையும் ஆட்சியா் கலைச்செல்வி மோகன் வழங்கினாா்.
விழாவுக்கு ஊரக வளா்ச்சி முகமையின் திட்ட இயக்குநா் க.ஆா்த்தி, வாலாஜாபாத் ஒன்றியக் குழு தலைவா் ஆா்.கே.தேவேந்திரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். தேவரியம்பாக்கம் ஊராட்சி மன்றத் தலைவா் அ.த.அஜய்குமாா் வரவேற்றாா்.
விழாவில் அலுவலா்கள், மாணவ, மாணவியா், பொதுமக்கள் கலந்து கொண்டனா்.