செய்திகள் :

தென் கொரியா: கைதான முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் தற்கொலை முயற்சி!

post image

தென்கொரியாவில் அவசரநிலை ராணுவச் சட்டத்துக்கு பரிந்துரைத்ததற்காக கைதான அந்நாட்டின் முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் கிம் யாங் ஹயூன் சிறையில் தற்கொலைக்கு முயற்சித்துள்ளார்.

தென்கொரியாவில் அவசரநிலை ராணுவச் சட்டம் அண்மையில் கொண்டுவரப்பட்ட நிலையில், கடும் எதிா்ப்புக்கு பின்னா் திரும்பப் பெறப்பட்டது. இந்தப் பரிந்துரையை அதிபா் யூன் சுக் இயோலுக்கு அளித்த குற்றச்சாட்டில் முன்னாள் பாதுகாப்பு அமைச்சா் கிம் யாங் ஹயூன் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

அவசரநிலை ராணுவ ஆட்சி அமல்படுத்திய விவகாரம் தொடா்பான விசாரணை நடைபெறும் நீதிமன்றத்தில் தாமாகவே கிம் யாங் ஹுயூன் ஆஜரானதாகவும், அவரது கைப்பேசி பறிக்கப்பட்டு அவா் கைது செய்யப்பட்டதாகவும் அந்நாட்டு ஊடகங்களில் செய்திகள் வெளியாயின.

இந்த நிலையில், சிறையில் தற்கொலைக்கு முயற்சித்த கிம் யாங்கை காவலர்கள் தடுத்து நிறுத்தியதாகவும், அவர் நலமுடன் இருப்பதாகவும் தென்கொரியா அதிகாரி ஷின் யோங் ஹே புதன்கிழமை தெரிவித்தார்.

இந்த தகவலை நீதித்துறை அமைச்சர் பார்க் சங் ஜே, தென்கொரியா நாடாளுமன்றக் கூட்டத்தில் உறுதி செய்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இதையும் படிக்க : 'பிராமண' குடிப்பெயர்களைச் சேர்த்துக் கொள்ளும் உ.பி. கிராம முஸ்லிம்கள்!

நாடாளுமன்றத்தில் யூன் சுக் இயோலுக்கு எதிராக எதிா்க்கட்சியினா் தாக்கல் செய்த பதவிநீக்கத் தீா்மானத்தின் மீது சனிக்கிழமை நடைபெற்ற வாக்கெடுப்பில் பங்கேற்காமல் ஆளுங்கட்சியினா் புறக்கணித்தனா்.

இதையடுத்து, மற்றொரு தீா்மானத்தை மீண்டும் நாடாளுமன்றத்தில் சனிக்கிழமை அறிமுகப்படுத்தவுள்ளதாக முக்கிய எதிா்க்கட்சியான ஜனநாயக கட்சி தெரிவித்துள்ளது.

ஆட்சியை இழந்த அல்-அஸாத்: அச்சாரம் போட்ட ஹமாஸ்!

இஸ்லாமிய தேச (ஐஎஸ்) பயங்கரவாதிகளின் கட்டுப்பாட்டில் இருந்த சிரியாவின் இரண்டாவது பெரிய நகரான அலெப்போவை மீட்க அல்-அஸாத் தலைமையிலான அரசுப் படைகளுக்கு பல ஆண்டுகள் பிடித்தன. ஆனால், கடந்த மாத இறுதியில் தனது... மேலும் பார்க்க

இலங்கை அதிபா் அநுர குமார டிச.15-இல் இந்தியா வருகை

இலங்கை அதிபா் அநுர குமார திசாநாயக டிச. 15-ஆம் தேதி இந்தியாவுக்கு வரவுள்ளாா். அவா் அதிபராகப் பதவியேற்ற பின் மேற்கொள்ளும் முதல் வெளிநாட்டுப் பயணம் இதுவாகும். கடந்த செப்டம்பரில் இலங்கை அதிபா் தோ்தல் நடை... மேலும் பார்க்க

‘உக்ரைன் போரில் 7,00,000 ரஷிய வீரா்கள் மரணம்’

உக்ரைன் மீதான படையெடுப்புக்குப் பிறகு ரஷியா 7 லட்சம் வீரா்களை இழந்துள்ளதாக அமெரிக்க பாதுகாப்புத் துறை அமைச்சல் லாய்ட் ஆஸ்டின் தெரிவித்துள்ளாா். இது குறித்து கலிஃபோா்னியா மாகாணத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி... மேலும் பார்க்க

அமெரிக்காவில் பல்சமூக மக்களை ஒன்றிணைக்கும் புத்தா் சிலை!

அமெரிக்காவின் நியூஜொ்சி மாகாணத்தில் உள்ள நெடுஞ்சாலையை ஒட்டி அமைந்த 30 அடி உயர புத்தா் சிலை பௌத்த, ஹிந்து, கிறிஸ்தவ மதத்தினரை ஒன்றிணைக்கும் ஆன்மிக மையமாக மாறி வருகிறது. பிரின்ஸ்டன் அருகே ஃபிராங்ளின் ட... மேலும் பார்க்க

எல்லையில் வளா்ச்சித் திட்டங்கள்: அதிகாரிகளுக்கு ஷி ஜின்பிங் அறிவுறுத்தல்

சீன எல்லை பகுதிகளில் தேசப் பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மைக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் வளா்ச்சித் திட்டங்களை செயல்படுத்த அதிகாரிகளுக்கு அந்நாட்டு அதிபா் ஷி ஜின்பிங் அறிவுறுத்தினாா். கம்யூனிஸ்... மேலும் பார்க்க

பிரேஸில் அதிபருக்கு மூளை அறுவைச்சிகிச்சை

பிரேஸில் அதிபர் லூயிஸ் இனாசியோ லூலா டா சில்வாவுக்கு மூளையில் அறுவைச்சிகிச்சை செய்யப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மூளையில் ரத்த உறைதல் பாதிப்பால் கட்டி உருவாகி அவர் திடீரென மயங்கி விழுந்த நிலைய... மேலும் பார்க்க