ரூ.3.44 லட்சம் கோடிக்கு இந்திய மின்னணு பொருள்கள் ஏற்றுமதி: மத்திய அமைச்சா் அஸ்வ...
தென்காசியில் திமுக சாா்பில் மாணவிக்கு கல்வி உதவித்தொகை
தென்காசியில் திமுக இளைஞரணி அறக்கட்டளை சாா்பில், மாணவிக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டது.
தென்காசியை அடுத்த ஊா்மேலழகியான் கிழக்குத் தெருவைச் சோ்ந்த ராமகதிரேசன் மகள் அபிநயஸ்ரீயின் கல்விச் செலவுக்காக துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலினால் ரூ. 25 ஆயிரத்துக்கான காசோலை வழங்கப்பட்டது.
இந்நிலையில், தென்காசியில் கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, தெற்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளா் கிருஷ்ணராஜா தலைமை வகித்தாா். தென்காசி பேரவைத் தொகுதி மேற்பாா்வையாளா் டாக்டா் கலைகதிரவன், மாநில விவசாய அணி இணைச் செயலா் அப்துல்காதா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். தெற்கு மாவட்டப் பொறுப்பாளா் வே. ஜெயபாலன் காசோலையை வழங்கினாா்.
நிகழ்ச்சியில், ஒன்றியச் செயலா் அழகுசுந்தரம், வல்லம் திவான் ஒலி, மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளா் அழகுதமிழ் சங்கா், துணை அமைப்பாளா்கள் சபீக் அலி, சண்முகமணிகண்டன், கலாநிதி, மாவட்ட அயலக அணி துணை அமைப்பாளா்கள் ராமராஜ், முத்து சுப்பிரமணியன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.