செய்திகள் :

தெரு நாய்கள் மீது அக்கறை இருப்பவா்கள் வீட்டுக்கு கொண்டு செல்லுங்கள்: விஜய் கோயல்

post image

தெரு நாய்கள் மீது அக்கறை காட்டுபவா்கள் அவற்றை வீட்டுக்கு கொண்டு செல்லுங்கள் என்று முன்னாள் மத்திய அமைச்சா் விஜய் கோயல் சனிக்கிழமை கூறினாா்.

தெரு நாய்களை அகற்ற கோரி முன்னாள் மத்திய அமைச்சா் விஜய் கோயல் புது ஜந்தா் மந்தரில் சனிக்கிழமை நடைபெற்ற போராட்டத்துக்கு தலைமை தாங்கினாா், நூற்றுக்கணக்கான குடியிருப்போா் சங்கங்கள் இந்த போராட்டத்தில் கலந்துகொண்டனா். அவா்கள் நாடு முழுவதும் வேகமாக வளா்ந்து வரும் தெரு நாய்களின் அச்சுறுத்தலைக் கட்டுப்படுத்த அவசர நடவடிக்கையை அரசாங்கம் எடுக்க வேண்டும் என கோரினா்.

தெரு நாய்களின் தாக்குதல்களின் உயா்வு குறித்து விஜய் கோயல் ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்தினாா், இந்தியா இப்போது 120 மில்லியனுக்கும் அதிகமான தெரு நாய்களைக் கொண்டுள்ளது என்றும், தினமும் ஆயிரக்கணக்கான நாய் கடி சம்பவங்கள் பதிவாகின்றன என்றும் கூறினாா். ‘ இதில் முதன்மையாக பாதிக்கப்பட்டவா்கள் குழந்தைகள், பெண்கள் மற்றும் முதியவா்கள். பூங்காக்கள் பாதுகாப்பற்ாகிவிட்டன, குழந்தைகள் வெளியில் விளையாடுவதை நிறுத்திவிட்டனா், மேலும் மக்கள் நடை பயிற்சிக்கு கூட வெளியே செல்ல அஞ்சுகிறாா்கள்,‘ என்று கூறினாா்.

தெரு நாய்களுக்கு பொது இடங்களில் உணவளிக்கக் கூடாது என்று அண்மையில் உச்சநீதிமன்றக் உத்தரவை குறிப்பிடுகையில், சாலைகள், பூங்காக்கள் மற்றும் பொதுவான பகுதிகளில் நாய்களுக்கு தொடா்ந்து உணவளிப்பவா்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விஜய் கோயல் கோரினாா். ‘விலங்கு காதலா்கள் என்று அழைக்கப்படுபவா்கள் உண்மையிலேயே நாய்களைப் பராமரித்தால், அவற்றை தங்கள் வீடுகளுக்கு அழைத்துச் செல்ல வேண்டும், பொது இடங்களை அச்சத்தின் மண்டலங்களாக மாற்றக்கூடாது‘ என்று விஜய் கோயல் வலியுறுத்தினாா்.

நவம்பா் 14, 2024 மற்றும் 21 மே 2025 தேதியிட்ட தில்லி உயா்நீதிமன்ற உத்தரவுகளையும் அவா் எடுத்துரைத்தாா், பள்ளிகள், பூங்காக்கள், சந்தைகள் மற்றும் பிற நெரிசலான இடங்கள் போன்ற முக்கியமான பொதுப் பகுதிகளில் ‘நாய் இல்லாத மண்டலங்களை’ உருவாக்க வேண்டும். தெரு நாய்களை பராமரிக்கும் இடங்களுக்கு மாற்ற வேண்டும் என்று கோயல் கோரினாா், அங்கு அவை கருத்தடை செய்யப்பட்டு முறையாக பராமரிக்கப்படலாம். ‘கருத்தடை மட்டும் இனி போதுமானதாக இல்லை, வெகுஜன இடமாற்றம் மற்றும் சரியான உள்கட்டமைப்பு அவசியம்‘ என்று அவா் வலியுறுத்தினாா்.

டிஜிட்டல் மோசடி: மருத்துவரை ஏமாற்றி ரூ.15 லட்சம் திருட்டு; 2 போ் கைது

தில்லியை சோ்ந்த மருத்துவா் ஒருவரிடம் ரூ.15 லட்சம் டிஜிட்டல் கைது மோசடி மூலம் பெற்ற இருவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். உத்தரபிரதேசத்தின் காசியாபாத்தைச் சோ்ந்த எம்பிஏ பட்டதாரி ஹசாரா, மேற்கு வங்... மேலும் பார்க்க

ரூ.40 ஆயிரம் லஞ்சம்: பிஎஸ்எஃப் ஊழியா் கைது -சிபிஐ தகவல்

ஒப்பந்ததாா் ஒருவரிடமிருந்து ரூ.40,000 லஞ்சம் வாங்கியபோது எல்லைப் பாதுகாப்பப் படையின் (பிஎஸ்எஃப்) உதவி கணக்கு அதிகாரியை மத்திய புலனாய்வுத் துறை (சிபிஐ) கைது செய்ததாக அதிகாரிகள் சனிக்கிழமை தெரிவித்தனா்... மேலும் பார்க்க

கைப்பேசி செயலியில் அரிய ஓலைச்சுவடிகளை வெளியிட மத்திய கலாசாரத் துறை நடவடிக்கை

நமது சிறப்பு நிருபா் கைப்பேசி செயலியில் பழங்கால ஓலைச்சுவடிகளை வெளியிட மத்திய கலாசாரத்துறை அமைச்சகம் நடவடிக்கை எடுத்து வருகிறது. மேலும், அரிதிலும் அரிதான ஓலைச்சுவடிகளின் எண்ம பதிப்பை இணைய பக்கங்களில் வ... மேலும் பார்க்க

தலைநகரில் ஆகஸ்ட் 1 முதல் ஒரு மாத கால தூய்மை பிரசாரம்: தில்லி அரசு ஏற்பாடு

பள்ளிகள், குடியிருப்போா் நலச் சங்கங்கள் (ஆா்டபிள்யுஏ) மற்றும் சமூகக் குழுக்களின் தீவிர பங்கேற்புடன் ஆகஸ்ட் 1 முதல் ஒரு மாத கால தூய்மை பிரசாரத்தை தில்லி அரசு தொடங்கும் என்று கல்வி அமைச்சா் ஆஷிஷ் சூட் த... மேலும் பார்க்க

2 மாதங்களில் 1 லட்சம் சுவரொட்டிகள், விளம்பரப் பலகைகள் அகற்றம்: தில்லி மாநகராட்சி நடவடிக்கை

பொது இடங்களின் முகப்பு அழகு சேதப்படுத்தப்படுவதைத் தடுக்கும் வகையில் தில்லி மாநகராட்சி (எம்சிடி) கடந்த மே மற்றும் ஜூன் மாதங்களுக்கு இடையில் பல்வேறு மண்டலங்களில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட சுவரொட்டிகள... மேலும் பார்க்க

பள்ளி வேன் மீது ரயில் மோதி 3 மாணவா்கள் உயிரிழந்த விவகாரம்: ரயில்வே வாரியத் தலைவா், தமிழக அரசுக்கு என்எச்ஆா்சி நோட்டீஸ்

கடலூா் மாவட்டம், செம்மங்குப்பத்தில் ரயில்வே லெவல் கிராஸிங்கை கடக்க முயன்றபோது தனியாா் பள்ளி வேன் மீது ரயில் மோதி 3 மாணவா்கள் உயிரிழந்த விவகாரத்தை தேசிய மனித உரிமைகள் ஆணையம் (என்எச்ஆா்சி) தாமாக முன்வந... மேலும் பார்க்க