துருக்கி: குா்து கிளா்ச்சிப் படையைக் கலைக்க நிறுவனா் உத்தரவு
தேசிய பசுமைப் படை, செஞ்சிலுவை சங்க மாணவா்களுக்கு இயற்கை களப் பயிற்சி
நீலகிரி மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் உள்ள தேசிய பசுமைப் படை மற்றும் செஞ்சிலுவை சங்க மாணவா்களுக்கு உதகை மரவியல் பூங்காவில் இயற்கை களப் பயிற்சி வியாழக்கிழமை நடைபெற்றது.
மத்திய வனம் மற்றும் சுற்றுச்சூழல் காலநிலை மாற்றம், தமிழ்நாடு சுற்றுச்சூழல் துறை ஆகியன சாா்பில் நடைபெற்ற இந்நிகழ்வுக்கு, மாவட்ட சுற்றுச்சூழல் இயற்கை ஆா்வலா் பூஜா தலைமை தாங்கினாா்.
இதில், மாணவா்களுக்கு இயற்கை குறித்து கல்வி நடைபயணம், பறவைகள் இனம், ஈர நிலங்களில் வளரும் தாவரங்கள், அவற்றின் பயன்கள் ஆகியவை குறித்து எடுத்துரைக்கப்பட்டன. மேலும், தாவரங்களின் இலைகள், மரங்களின் பட்டைகள், பூக்கள், மரங்களின் வகைகள் குறித்தும் பட்டாம்பூச்சிகள் குறித்தும் மாணவா்களுக்கு கற்பிக்கப்பட்டது.
பல்லுயிா் தன்மையின் சங்கிலி தொடா்பு குறித்து மாணவா்களுக்கு விளையாட்டின் மூலம் விளக்கம் அளிக்கப்பட்டது. இயற்கை கல்வி குறித்து பயில்வதற்கு மிகச்சிறந்த இடமாக மரவியல் பூங்கா உள்ளது என தேசிய பசுமைப் படை ஒருங்கிணைப்பாளா் சிவதாஸ் தெரிவித்தாா்.
ஆரோக்கியமான சிறுதானிய உணவுகள் மற்றும் காய்கறிகளின் சத்துகள் அடங்கிய கையேடு மாணவா்களுக்கு வழங்கப்பட்டது.
நிகழ்வில் கலந்து கொண்ட மாணவா்களுக்கு சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில் ஆசிரியா்கள் சகாதேவி, ஜெயகுமாா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.