செய்திகள் :

தேர்தல் பிரசாரத்தின் இடையே பிரசாந்த் கிஷோர் காயம்!

post image

பிகாரில் சாலை வலம் சென்றபோது வாகனம் ஒன்று மோதி, ஜன் சுராஜ் கட்சித் தலைவர் பிரசாந்த் கிஷோர் காயமடைந்தார்.

பாஜக, திமுக, திரிணமூல் என நாட்டில் பல்வேறு கட்சிகளுக்கு பல தேர்தல்களில் வியூகங்களை வகுத்துக் கொடுத்த தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர், பிகாரில் 2022ல் 'ஜன் சுராஜ்' என்ற தனிக்கட்சியைத் தொடங்கி செயல்பட்டு வருகிறார்.

பிகார் பேரவைத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளதால் அதற்கான தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார்.

இந்நிலையில் பிகாரில் ஆரா மாவட்டத்தில் தேர்தல் பிரசாரத்தின் ஒருபகுதியாக சாலை வலம் சென்றபோது கூட்டத்தின் நடுவே பிரசாந்த் கிஷோர் நடந்து சென்றுள்ளார். அப்போது வாகனம் ஒன்று மோதியதில் அவர் படுகாயமடைந்தார்.

உடனடியாக அவரை பாட்னாவுக்கு அழைத்துச் சென்று மருத்துவமனையில் சேர்த்தனர். பலத்த காயம் எதுவும் இல்லை என்றும் எலும்பில் லேசாக காயம் ஏற்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பிகார் தேர்தலில் ஜன் சுராஜ் கட்சி தனித்துப் போட்டியிடுகிறது. 243 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை நிறுத்துவதாக அறிவித்துள்ளது. ஜேடியு - பாஜக கூட்டணி, காங்கிரஸ் கூட்டணி, ஜன் சுராஜ் கட்சி என பிகாரில் மும்முனைப் போட்டி நிலவுகிறது.

Prashant Kishor hit by vehicle during roadshow in Bihar, suffers rib injury

ஜம்மு-காஷ்மீரில் குண்டு பாய்ந்து பெண் பலி !

ஜம்மு-காஷ்மீரில் கிராம பாதுகாப்பு காவலரின் துப்பாக்கியில் இருந்து குண்டு பாய்ந்ததில் பெண் ஒருவர் பலியானார். ஜம்மு-காஷ்மீரின் அரகம் கிராமத்தில் தனது வீட்டை விட்டு வெளியே ராகேஷ் குமாரின் மனைவி புஷ்பா தே... மேலும் பார்க்க

முன்னாள் கிரிக்கெட் வீரர் அசாருதீன் வீட்டில் திருட்டு !

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் முகமது அசாருதீன் வீட்டில் மர்ம நபர்கள் திருடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.மகாராஷ்டிர மாநிலம், புணே மாவட்டத்தில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கே... மேலும் பார்க்க

"மேக் இன் இந்தியா" என்ற பெயரில் ஒன்றுகூடுகிறோமே தவிர உற்பத்தி செய்யவில்லை: ராகுல்

இந்தியாவில் சிறு தொழில்முனைவோர் உற்பத்தி செய்ய விரும்புகிறார்கள் ஆனால் அவர்களுக்கு ஆதரவான கொள்கை இல்லை என மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி கூறினார். இதுதொடர்பாக ராகுல் வெளியிட்ட எக்ஸ் பதிவில... மேலும் பார்க்க

மதசார்பற்ற சக்திகளை ராகுல் ஒன்றிணைக்க வேண்டுமே தவிர பிரிக்கக் கூடாது: ஜான் பிரிட்டாஸ்

மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியின் ஒரே நோக்கம் மதச்சார்பற்ற சக்திகளை ஒன்றிணைப்பதாக இருக்க வேண்டுமே தவிர, குழப்பத்தையும் பிரிவினையையும் உருவாக்கக்கூடாது என்று சிபிஐ(எம்) தலைவர் ஜான் பிரிட்... மேலும் பார்க்க

24-வது முறையாக டிரம்ப் பேச்சு! கூட்டத்தொடரில் மோடி பதிலளிக்க வேண்டும்! - காங்கிரஸ்

இந்தியா - பாகிஸ்தான் இடையேயான போரை நிறுத்தியதாக 24-வது முறையாக அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியுள்ளதற்கு, வரும் கூட்டத்தொடரில் பிரதமர் மோடி கண்டிப்பாக பதிலளிக்க வேண்டும் என்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜ... மேலும் பார்க்க

உ.பி.யில் கொட்டித்தீர்த்த கனமழை: ஒரேநாளில் 18 பேர் பலி!

உத்தரப் பிரதேசத்தில் கடந்த 24 மணி நேரத்தில் கொட்டித்தீர்த்த கனமழைக்கு இதுவரை 18 பேர் பலியாகியுள்ளனர். மாநிலத்தில் கடந்த சில நாள்களாக பல்வேறு மாவட்டங்களிலும் கனமழை கொட்டித்தீர்த்து வருவதால் பாதிப்பும்,... மேலும் பார்க்க