``கூட்டணி ஆட்சிக்கு ஒத்துக்க நாங்க ஒன்னும் ஏமாளி இல்ல!'' - பாஜகவுக்கு எடப்பாடி `...
தேவகோட்டையில் பயன்பாட்டு வந்த 200 கண்காணிப்பு கேமராக்கள்!
சிவகங்கை மாவட்டம், தேவகோட்டையில் நகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் பொருத்தப்பட்ட 200 -க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமராக்களின் செயல்பாடுகள் சனிக்கிழமை தொடங்கி வைக்கப்பட்டன.
தேவகோட்டையில் நடைபெற்ற நிகழ்வுக்கு நகா்மன்றத் தலைவா் சுந்தரலிங்கம் தலைமை வைத்தாா். காவல் துணைக் கண்காணிப்பாளா் கௌதம், நகராட்சி ஆணையா் கண்ணன், துணைத் தலைவா் ரமேஷ் ,பொறியாளா் நீராளி ஆகியோா் முன்னிலை வகித்தனா். சிவகங்கை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் (பொ) சந்தீஷ் தொடங்கி வைத்தாா்.
இதில் தேவகோட்டை நகராட்சியில் அனைத்து பகுதிகளிலும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் வகையில் 200 -க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு செயல்பாட்டுக்கு வந்தன. இதற்கென தனி கண்காணிப்புக் குழு அமைக்கப்பட்டதாக காவல்துறையினா் தெரிவித்தனா்.