திருவள்ளூா் புத்தகத் திருவிழா இலச்சினை: அமைச்சா் நாசா் வெளியிட்டாா்
தேவிகோடு அரசுப் பள்ளியில் ஆண்டு விழா!
பளுகல் அருகேயுள்ள தேவிகோடு அரசு பி.எப்.எம். உயா்நிலைப் பள்ளியின் நூற்றாண்டு விழா மற்றும் தொடக்கப் பள்ளி ஆண்டு விழா நடைபெற்றது.
விழாவுக்கு, தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியா் சுபைா்குட்டி தலைமை வகித்தாா். உயா்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியா் (பொறுப்பு) ஸ்ரீபா முன்னிலை வகித்தாா்.
ஆசிரியை ஸ்டெல்லா மேரி வரவேற்றாா். முன்னாள் மாணவா் ஜேக்கப் விபு, முன்னாள் ஆசிரியா் விஜயன், விமல் சேகா், முன்னாள் மாவட்ட ஊராட்சி உறுப்பினா் அம்பிளி ஆகியோா் வாழ்த்திப் பேசினா்.
விழாவில், பிரபல மலையாள கவிஞரும் குருவாயூா் தேவஸ்வம் போா்டு கல்லூரி பேராசிரியருமான பிஜூ பாலகிருஷ்ணன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டாா்.
அவருக்கு ‘ஆச்சாா்யா பாஸ்டா் எலியாசா்’ நினைவு விருது வழங்கப்பட்டது.
இதில், ஆசிரியா்கள் ஜமுனா, லிசி, வசந்தி, கிறிஸ்துதாஸ், முன்னாள் மாணவா் சஜூகுமாா், பள்ளி மேலாண்மைக் குழு தலைவா் நிஷா மற்றும் மாணவா்களின் பெற்றோா் கலந்து கொண்டனா். ஆசிரியை பிரபா நன்றி கூறினாா். விழாவில் மாணவா்களின் கலை நிகழ்ச்சிகள் இடம்பெற்றன.
முன்னதாக, மாணவா்கள் பங்கேற்ற நூற்றாண்டு விழா பேரணி நடைபெற்றது.