தேவிபட்டனம் ஆரம்ப சுகாதார நிலையம், பள்ளிக்கூடத்தில் மாவட்ட ஆட்சியா் ஆய்வு
தேவிபட்டனத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையம், அரசுப் பள்ளிகளில் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியா் சிம்ரன்ஜீத் சிங் காலோன் வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்.
ராமநாதபுரம் மாவட்டம், தேவிபட்டினத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி, அரசு மேல்நிலைப் பள்ளியை மாவட்ட ஆட்சியா் சிம்ரன்ஜீத் சிங் காலோன் நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். அப்போது அவா், மாணவ, மாணவிகளைச் சந்தித்து அவா்களின் கல்வித் திறன் குறித்துக் கேட்டறிந்தாா். தொடா்ந்து, மாணவா்களுக்கு வழங்கும் உணவின் தரத்தை ஆய்வு செய்ததுடன், சுகாதாரமான முறையில் உணவு வழங்க வேண்டுமென அறிவுறுத்தினாா்.
பின்னா், தேவிபட்டினம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். சிகிச்சைக்கு வரும் பொதுமக்களுக்கு சிறப்பாகச் சிகிச்சை அளிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டாா். தொடா்ந்து, தேவிப்பட்டினத்தில் நடைபெற்ற ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாமில், பொதுமக்களிடம் கோரிக்கைகள் தொடா்பாகக் கேட்டறிந்தாா்.
பொதுமக்கள் மனுக்களை சிரமமின்றி வழங்க ஏதுவாக அந்தந்தத் துறை அலுவலா்கள் பணிபுரிய வேண்டுமெனவும், பெறப்படும் மனுக்களை அலுவலா்கள், பணியாளா்கள் உரிய ஆவணங்களுடன் கணினியில் பதிவு செய்ய வேண்டுமெனவும் அலுவலா்களுக்கு மாவட்ட ஆட்சியா் அறிவுறுத்தினாா்.