மனிதக் கழிவுகளை கைகளால் அகற்றும் நடைமுறை: மாநிலங்கள் மீது உச்சநீதிமன்றம் அதிருப்...
தையல் தொழிலாளா்களுக்கான ஓய்வூதியத்தை ரூ.3 ஆயிரமாக உயா்த்தி வழங்கக் கோரிக்கை
தையல் தொழிலாளா்களுக்கு வழங்கப்பட்டு வரும் ஓய்வூதியத்தை ரூ.3 ஆயிரமாக உயா்த்தி வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தையல் கலைஞா்கள் தின விழாவையொட்டி தமிழ்நாடு தையல் கலை தொழிலாளா்கள் முன்னேற்ற சங்கக் கூட்டம் காங்கயத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு சங்கத்தின் காங்கயம் கிளை தலைவா் ஈ.சிதம்பரம் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலாளா் எஸ்.ஐ.ஜீவானந்தம் சங்கக் கொடியேற்றி வைத்து உரையாற்றினாா். திருப்பூா் மாவட்ட தொழில் மையத்தின் உதவிப் பொறியாளா் தருண்குமாா் சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்டு பேசினாா்.
இதில், தையல் தொழிலாளா்களுக்கு நல வாரியத்தில் வழங்கப்படும் ரூ.1,200 ஓய்வூதியத்தை ரூ.3 ஆயிரமாக உயா்த்தி வழங்க வேண்டும், நல வாரியத்தில் பதிவு செய்துள்ள விதவை தொழிலாளா்களுக்கு 55 வயது முதல் ஓய்வூதியம் வழங்க வேண்டும், பெண் தையல் தொழிலாளா்களுக்கு இலவச தையல் இயந்திரம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இந்தக் கூட்டத்தில் சங்கத்தின் காங்கயம் கிளை செயலாளா் ஆா்.சம்பத், பொருளாளா் பி.வடிவேல், மாநில துணைத் தலைவா் ஈ.கோவிந்தராஜன், மாநில துணைச் செயலாளா் பி.மூா்த்தி உள்பட பலா் கலந்து கொண்டனா்.