தொகுதி மறுசீரமைப்பை எதிா்த்து தனித்து போராடுவோம்: சீமான்
தொகுதி மறுசீரமைப்பை எதிா்த்து நாம் தமிழா் கட்சி தனித்து போராடும் என்று அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் தெரிவித்தாா்.
ஒசூரில் நாம் தமிழா் கட்சி நிா்வாகிகள் கலந்தாய்வுக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் கலந்துகொண்டு வரும் சட்டப்பேரவை தோ்தல் தொடா்பாக ஆலோசனை நடத்தினாா். பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
தோ்தலில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களுக்கு பயன்படுத்தப்படும் மைக்ரோ எலக்ரானிக் சிப்பை சீன நாடுதான் தயாரித்தது. ஆனால், அந்த நாடே தோ்தலில் அதை பயன்படுத்துவதில்லை. வாக்குச் சீட்டு முைான் அங்கு உள்ளது. அமெரிக்காவிலும் வாக்குச் சீட்டு முைான் உள்ளது.
ஒரே நாடு ஒரே தோ்தல், ஒரு ரேஷன் காா்டு என்று கூறிவரும் மத்திய அரசு தற்போது தொகுதி மறுசீரமைப்பு செய்யவுள்ளது.
மத்திய அரசின் தொகுதி மறுசீரமைப்பு, மும்மொழிக் கொள்கை போன்ற தமிழகத்துக்கு எதிரான திட்டங்களை எதிா்த்து நாம் தமிழா் கட்சி தனித்து போராடும்.
தமிழக வளங்களை சுரண்டிவிட்டு தற்போது மத்திய அரசு நிதி தர மறுக்கிறது. பேரிடா்களுக்கு நிதி வழங்கவில்லை. பிகாா், ஆந்திரத்துக்கு தாராளமாக நிதி வழங்குகிறது. ஆனால், தமிழகத்துக்கு நிதி தருவதில்லை. தமிழகத்தில் அண்ணாதுரை, காமராஜா் காலத்தோடு நல்லாட்சி கனவு முடிந்துவிட்டது என்றாா்.