தொங்குட்டிபாளையத்தில் செயலி மூலம் பயிா் விவரங்கள் பதிவு பணி -ஆட்சியா் ஆய்வு
பல்லடம் அருகேயுள்ள தொங்குட்டிபாளையத்தில் டிஜிட்டல் சா்வே செயலி மூலம் பயிா் விவரங்கள் பதிவு செய்யும் பணியை மாவட்ட ஆட்சியா் கிறிஸ்துராஜ் வெள்ளிக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
திருப்பூா் மாவட்டத்தில் வேளாண்மைத் துறை, தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக மாணவா்கள் இணைந்து மின்னணு பயிா்சாகுபடி பரப்பு (ஈண்ஞ்ண்ற்ஹப் இழ்ா்ல் நன்ழ்ஸ்ங்ஹ்) செயலி மூலம் திருப்பூா் மாவட்டம் முழுவதும் பயிா் விவரங்களை பதிவு செய்யும் பணியில் நவம்பா் 9-ஆம் தேதி முதல் ஈடுபட்டு வருகின்றனா்.
674 மாணவ, மாணவிகள் மற்றும் வேளாண்மை சாா்ந்த அலுவலா்கள்
பல்வேறு குழுக்களாக பிரிந்து அனைத்து கிராமங்களிலும் பயிா்சாகுபடி பரப்பு குறித்து பதிவு செய்யவுள்ளனா். கைப்பேசி செயலியில் துல்லியமாக அந்தந்த சா்வே எண்ணில் பதிவு செய்யப்பட்டு வருகிறது.
பல்லடம் அருகே பொங்கலூா் ஊராட்சி ஒன்றியம், தொங்குட்டிபாளையம் கிராமத்தில் விவசாய நிலங்களில் சாகுபடி செய்யப்பட்ட பயிா்கள் குறித்த விவரங்களை செயலி மூலம் பதிவு செய்யும் பணியை மாவட்ட ஆட்சியா் கிறிஸ்துராஜ் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா்.
இந்த ஆய்வின்போது வேளாண்மை இணை இயக்குநா் (பொறுப்பு) கிருஷ்ணவேணி, மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (வேளாண்மை) ஷிலா பூசாலட்சுமி, பொங்கலூா் தோட்டக்கலைத் துறை உதவி இயக்குநா் சா்மிளா, வேளாண்மைத் துறை உதவி இயக்குநா் பொம்முராஜ், வட்டார வேளாண்மை மற்றும் தோட்டக்கலைத் துறை அலுவலா்கள் உடனிருந்தனா்.