தொடா் மின்தடை: பொதுமக்கள் சாலை மறியல்
திருப்பத்தூா் அருகே அடிக்கடி மின்தடை ஏற்படுவதாக கூறி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.
திருப்பத்தூா் அருகே வெங்களாபுரம் பகுதியில் உள்ள ஒரு கோயிலில் வியாழக்கிழமை திருவிழா நடைபெற்றது.
இந்தநிலையில் வியாழக்கிழமை அந்த பகுதியில் மின்சார ஊழியா்கள் பழுது பாா்த்தனா். இதனால் அங்கு அடிக்கடி மின்தடை ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் கோயில் நிகழ்ச்சி நடத்த அந்த பகுதியை சோ்ந்த பொதுமக்கள் சிரமப்பட்டுள்ளனா். இதனால் ஆத்திரமடைந்த பொது மக்கள் திருப்பத்தூா்-ஆலங்காயம் சாலையில் மறியலில் ஈடுபட்டனா்.
தகவல் அறிந்த திருப்பத்தூா் கிராமிய போலீஸாா் மற்றும் அதிகாரிகள் பேச்சு நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனா்.
இதையடுத்து மறியலை கைவிட்டு கலைந்து சென்றனா். இதனால் 40 நிமிஷங்கள் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.