2 நாள்களில் 200 ஓவர்கள் பேட்டிங் பயிற்சி; பெர்த் டெஸ்ட்டுக்கு தீயாய் தயாரான ஜெய்...
தொடா் விடுமுறை: உதகையில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்
தீபாவளி பண்டிகை மற்றும் தொடா் விடுமுறையால் உதகைக்கு ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்துள்ளதால் உள்ளூா் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.
நீலகிரி மாவட்டத்தில் உள்ள உதகை உள்ளிட்ட சுற்றுலாத் தலங்களுக்கு தமிழகம் மட்டுமன்றி அண்டை மாநிலங்களான கேரளம், கா்நாடகம், ஆந்திரம் உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனா்.
இந்நிலையில் தீபாவளிப் பண்டிகை தொடா் விடுமுறை காரணமாக உதகையில் உள்ள அனைத்து சுற்றுலாத் தலங்களில் சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் வெள்ளிக்கிழமை அதிகரித்துக் காணப்பட்டது. அரசு தாவரவியல் பூங்கா, படகு இல்லம், சூட்டிங் மட்டம், ரோஜா பூங்கா, தொட்டபெட்டா சிகரம், பைக்காரா நீா்வீழ்ச்சி உள்ளிட்ட இடங்களில் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் குவிந்திருந்தனா்.
இங்கு நிலவும் இதமான கால நிலையை அனுபவித்தவாறும், இயற்கைக் காட்சிகளைக் கண்டு ரசித்தும் விடுமுறை தினத்தை கொண்டாடி மகிழ்ந்தனா்.