ரூ.3.44 லட்சம் கோடிக்கு இந்திய மின்னணு பொருள்கள் ஏற்றுமதி: மத்திய அமைச்சா் அஸ்வ...
தொண்டி பேருந்து நிலையத்தில் ஆக்கிரமிப்பு: பயணிகள் அவதி
தொண்டி பேருந்து நிலையத்தில் ஆக்கிரமிப்புகள் அதிகரித்துள்ளதால் பொதுமக்கள் அவதிப்படுகின்றனா்.
ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி பேருந்து நிலையத்துக்கு பட்டுக்கோட்டை, மீமசல், ராமேசுவரம், அறந்தாங்கி, ராமநாதபுரம், கீழக்கரை, ஏா்வாடி, நாகூா், நாகப்பட்டினம், மதுரை, காரைக்குடி, தேவகோட்டை, திருச்சி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு நாள்தோறும் நூற்றுக்கு மேற்பட்ட பேருந்துகள் வந்து செல்கின்றன.
இங்கு நாள்தோறும் ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் வந்து செல்கின்றனா். ஆனால் பேருந்து நிலைய வணிக வளாகம் அருகே கடையின் உரிமையாளா்கள் ஆக்கிரமிப்பு செய்துள்ளனா்.
இதனால் இங்கு வரும் பயணிகள் அவதிப்பட்டு வருகின்றனா். எனவே, பேரூராட்சி நிா்வாகம் பேருந்து நிலைய ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.