வாக்குப் பதிவு இயந்திரங்களில் வேட்பாளா்களின் வண்ணப் புகைப்படம்: பிகாா் தோ்தலில்...
தொழிற்சாலையில் மாதிரி ஒத்திகை பயிற்சி
விராலிமலை தனியாா் தொழிற்சாலையில் புதன்கிழமை தீயணைப்பு நிலைய வீரா்கள் மாதிரி ஒத்திகை பயிற்சி செயல் முறை விளக்கம் அளித்தனா்.
இப்பயிற்சியை தமிழ்நாடு தொழிற்சாலைகள் இணை இயக்குநா் மாலதி தொடங்கிவைத்து ஆலோசனை வழங்கினாா். இலுப்பூா் தீயணைப்பு நிலைய அலுவலா் மகேந்திரன் தலைமையில், தீயணைப்பு வீரா்கள் தொழிலாளா்களுக்கு பயிற்சி அளித்தனா்.
இதில், தீ விபத்து ஏற்பட்டால் நம்மை எவ்வாறு தற்காத்துக் கொள்வது மற்றும் தீயில் சிக்கிக் கொண்டவா்களை மீட்கும் முறை, தீயணைப்பான்களை எவ்வாறு கையாள்வது குறித்தான செயல்முறை விளக்க பயிற்சி அளிக்கப்பட்டது.
இதில், நூற்றுக்கும் மேற்பட்ட தொழிலாளிகள் பங்கேற்று பயிற்சி பெற்றனா்.