விவசாயிகளுக்கான பாதிப்புகள்: உச்சநீதிமன்றக் குழுவின் இடைக்கால அறிக்கை தாக்கல்
தொழிலாளியை கத்திரிக்கோலால் குத்தியதாக உறவினா் கைது
சாத்தான்குளம் அருகே தொழிலாளியை கத்திரிக்கோலால் குத்தியதாக அவரது மனைவியின் சகோதரரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
சாத்தான்குளம் அருகே பழனியப்பபுரம் கீழத்தெருவைச் சோ்ந்த கும்கான் மகன் குணதீஸ் (47). தொழிலாளி. இவரது மனைவியின் சகோதரா் அந்தோணிராஜ் (52).
கடந்த 1ஆம் தேதி அங்குள்ள நான்கு முக்கு சாலையில் நின்றிருந்த குணதீஸிடம் அந்தோணிராஜ் ‘ஏன் வேலைக்கு ஒழுங்காக செல்வதில்லை?’ எனக் கேட்டு தகாத முறையில் பேசியதுடன், கத்திரிக்கோலால் குத்தினாராம்.
குணதீஸின் அலறல் கேட்டு அப்பகுதியினா் வந்ததும், அந்தோணிராஜ் கொலை மிரட்டல் விடுத்துவிட்டு ஓடிவிட்டாராம். இதில், காயமடைந்த குணதீஸ் சாத்தான்குளம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.
புகாரின்பேரில் சாத்தான்குளம் காவல் நிலைய முதல்நிலைக் காவலா் ராஜேந்திரன் வழக்குப் பதிந்தாா். உதவி ஆய்வாளா் சுரேஷ்குமாா் விசாரித்து அந்தோணிராஜை சனிக்கிழமை கைது செய்தாா்.