செய்திகள் :

தோல்வி எதிரொலி: கேப்டன் பொறுப்பு, ஒருநாள் போட்டிகளில் விலகும் ஜாஸ் பட்லர்?

post image

சாம்பியன்ஸ் டிராபி தோல்வியால் கேப்டன் பொறுப்பு குறித்து பட்லர் சிந்திப்பதாகக் கூறியுள்ளார்.

சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட்டின் 8-ஆவது ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் 8 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை ‘த்ரில்’ வெற்றி கண்டது.

முதலில் ஆப்கானிஸ்தான் 50 ஓவா்களில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 325 ரன்கள் சோ்க்க, இங்கிலாந்து 49.5 ஓவா்களில் 317 ரன்களுக்கே 10 விக்கெட்டுகளையும் இழந்தது.

இந்தத் தோல்வியினால் இங்கிலாந்து அணி சாம்பியன்ஸ் டிராபியிலிருந்து வெளியேறியது.

கேப்டனாக இருப்பது குறித்து சிந்திக்க வேண்டும்

இது குறித்து ஜாஸ் பட்லர் கூறியதாவது:

முன்னதாகவே தொடரிலிருந்து வெளியேறுவது வருத்தமாக இருக்கிறது. வெற்றிபெற வாய்ப்பிருந்தும் அதை விட்டுவிட்டோம்.

ஜோ ரூட் நம்பமுடியாத அளவுக்கு நன்றாக விளையாடினார். அழுத்தத்தை நன்றாக சமாளித்து ஆடினார். அவருக்கு துணையாக முதல் 6 பேட்டர்களில் யாரவது ஒருவர் உதவியிருக்க வேண்டும்.

உணர்ச்சிகரமாக இருப்பதால் இப்போது எதுவும் நான் சொல்ல விரும்பவில்லை. நான் என்னைப் பற்றியும் தொடக்க வீரர்கள் சிலர் குறித்தும் சிந்திக்க வேண்டும் .

கேப்டனாக இல்லாத போதும் நான் தலைமைப் பொறுப்பை ரசித்தேன். ஆனால் முடிவுகள் கடுமையாக இருக்கின்றன.

நான் பிரச்னையின் ஒரு பகுதியா?

நான் கேப்டன்சியை (தலைமைப் பொறுப்பை) ரசித்தேன். பலருக்கும் எனக்கு ஒத்துவராது என்றார்கள். ஆனால், நான் மகிழ்ச்சியாக செய்தேன். தோற்பது எனக்கும் பிடிக்கவில்லை. கண்ணாடியைப் பார்த்து 'நான் பிரச்னையின் ஒரு பகுதியா அல்லது தீர்வின் ஒரு பகுதியா?’ எனக் கேட்டுக் கொள்கிறேன். நான் அதைத்தான் தீர்க்க விரும்புகிறேன் எனக் கூறியுள்ளார்.

நிச்சயமாக அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் செல்லவே நினைக்கிறோம். ஆனால், தோல்விகள் நீண்ட காலமாகும்போது கூடுதல் கனமாகிறது.

நம்பிக்கையுடன் இருக்கும் அணியே வெல்கிறது. அப்படிதான் விளையாட்டில் சில நேரங்களில் நடக்கின்றன.

நான் எனது சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தும்போது நான் தான் உலகத்திலேயே சிறந்த வீரர். ஆனால், தற்போது அந்த அளவுக்கு விளையாடுவதில்லை. நல்ல டச்சில் இருந்தாலும் ரன்களை குவிக்க முடியவில்லை. அதனால் வெறுப்பாக இருக்கிறது எனக் கூறியுள்ளார்.

வலைப் பயிற்சியைத் தவிர்த்த ரோஹித் சர்மா! கடைசிப் போட்டியில் விளையாடுவாரா?

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனும் அதிரடி ஆட்டக்காரருமான ரோஹித் சர்மா இன்று(பிப்.27) நடைபெற்ற வலைப் பயிற்சியில் ஈடுபடாததால், நியூசிலாந்துக்கு எதிரான கடைசிப் போட்டியில் விளையாடுவாரா? என்ற சந்தேகம் எழு... மேலும் பார்க்க

மேக்ஸ்வெல்லுக்கு மட்டுமின்றி மொத்த ஆஸி.க்கு எதிராக திட்டமிருக்கிறது: ஆப்கன் கேப்டன்

கிளன் மேக்ஸ்வெல்லுக்கு மட்டுமின்றி ஒட்டுமொத்த ஆஸ்திரேலிய அணிக்கு எதிராகவும் திட்டமிருப்பதாக ஆப்கானிஸ்தான் அணியின் கேப்டன் ஹஸ்மதுல்லா ஷகிதி தெரிவித்துள்ளார்.ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் லாகூரில் நே... மேலும் பார்க்க

பக்குவமடைந்த தலைவன் ரோஹித் சர்மா..! மனம் திறந்த ஷிகர் தவான்!

முன்னாள் இந்திய வீரர் ஷிகர் தவான் ரோஹித் சர்மாவின் கேப்டன்சி, அவருடனான நட்பு குறித்து நெகிழ்ச்சியாகப் பேசியுள்ளார்.இந்திய அணி சாம்பியன்ஸ் டிராபி போட்டிகளில் அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது. முன்னதாக ர... மேலும் பார்க்க

பாகிஸ்தான் - வங்கதேசப் போட்டி ரத்து: மழைக்கு 2-வது வெற்றி!

சாம்பியன்ஸ் டிராபியில் பாகிஸ்தான் - வங்கதேசம் அணிகள் மோதிய போட்டி மழை காரணமாக ரத்து செய்யப்பட்டது.பாகிஸ்தானில் நடைபெறும் 9-வது சாம்பியன்ஸ் டிராபி தொடரில் குரூப்-ஏ பிரில் உள்ள இந்தியா, நியூசிலாந்து ஆகி... மேலும் பார்க்க

தில்லி கேபிடல்ஸின் ஆலோசகராக கெவின் பீட்டர்சன் நியமனம்!

தில்லி கேபிடல்ஸ் அணியின் ஆலோசகராக இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் கெவின் பீட்டர்சன் நியமிக்கப்பட்டுள்ளார்.இந்த ஆண்டு ஐபிஎல் தொடர் வருகிற மார்ச் 22 ஆம் தேதி தொடங்கவுள்ளது. தொடரின் முதல் போட்டியில்... மேலும் பார்க்க

ஓய்வு பெறுகிறேனா? வதந்திகளை நம்பாதீர்கள்: பாகிஸ்தான் வீரர் பேட்டி!

34 வயதாகும் பாகிஸ்தான் வீரர் ஃபகார் ஸமான் ஓய்வு பெறப்போவதில்லை எனக் கூறியுள்ளார். கடந்த 2017இல் சாம்பியன்ஸ் டிராபியை வென்ற பாகிஸ்தான் அணி தற்போது அரையிறுதிக்கு நுழையாமல் வெளியே செல்கிறது. ஃபகார் ஸமான்... மேலும் பார்க்க