செய்திகள் :

த்ரிஷாவின் 22 ஆண்டுகால திரைப் பயணம்..! கேக் வெட்டி கொண்டாடிய படக்குழு!

post image

சூர்யா 45 படப்பிடிப்பில் நடிகை த்ரிஷாவின் 22 ஆண்டுகால நிறைவையொட்டி படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடினர். இந்த விடியோவினை தயாரிப்பு நிறுவனமான ட்ரீம் வாரியர் ஃபிக்சர்ஸ் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளது.

மெளனம் பேசியதே படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமான த்ரிஷா, சாமி, கில்லி, திருப்பாச்சி, ஆறு, கிரீடம் என அடுத்தடுத்து ஹிட் படங்களை கொடுத்து தமிழ் திரையுலகில் நீண்ட நெடிய ஆண்டுகள் தனக்கான இடத்தை தக்க வைத்தார்.

அஜித்துடன் நடித்த மங்காத்தா படத்துக்கு பிறகு சரியான திரைப்படம் அமையாமல் தவித்து வந்த த்ரிஷாவுக்கு விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடித்த 96 திரைப்படம் மாபெரும் ஹிட்டானது.

பொன்னியின் செல்வன், லியோ திரைப்படங்களின் மூலம் மீண்டும் த்ரிஷா ஃபார்முக்கு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

சூர்யாவை வைத்து ஆர்.ஜே.பாலாஜி இயக்கும் படத்தில் த்ரிஷா நாயகியாக நடிக்கிறார். இதன் படப்பிடிப்பு தமிழ்நாட்டில் நடைபெறுவதாக தகவல்.

சூர்யாவும் த்ரிஷாவும் 'ஆறு' திரைப்படத்தில் நடித்திருந்தனர். 20 ஆண்டுகள் கழித்து இருவரும் மீண்டும் இணைந்து நடிப்பது ரசிகர்களிடையே ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது.

த்ரிஷா அஜித்துடன் நடித்துள்ள விடா முயற்சி படம் பொங்கலுக்கு வெளியாகவிருக்கிறது.

தெலுங்கில் சிரஞ்சீவியுடன் விஷ்வம்பரா எனும் படத்தில் நடித்து முடித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

எஸ்கே - 25 படப்பிடிப்பு துவக்கம்!

சிவகார்த்திகேயன் - சுதா கொங்காரா படத்தின் படப்பிடிப்பு துவங்கியது.அமரன் திரைப்படத்தின் வெற்றிக்குப் பின் நடிகர் சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவின் பெரிய நட்சத்திர நடிகராக வளர்ந்துள்ளார். இப்படத்திற்குப... மேலும் பார்க்க

ஜெயம் ரவி - 34 பூஜை!

நடிகர் ஜெயம் ரவி நடிக்கும் அவரது 34-வது படத்தின் பூஜை இன்று நடைபெற்றது.நடிகர் ஜெயம் ரவியின் 34-வது படத்தின் பூஜை இன்று சென்னையில் நடைபெற்றது. டாடா இயக்குநர் கணேஷ் பாபு இயக்கும் இப்படத்தில் நாயகியாக தவ... மேலும் பார்க்க

டூரிஸ்ட் ஃபேமிலி: டப்பிங் பணிகளை தொடங்கிய சசிகுமார்!

நடிகர் சசிகுமார் புதியதாக நடித்துள்ள டூரிஸ்ட் ஃபேமிலி படத்தின் டப்பிங் பணிகளை தொடங்கியுள்ளார். இந்தப் படத்தில் சசிகுமாருடன் நடிகை சிம்ரன் நடித்துள்ளார்.இந்தப் படத்தினை அறிமுக இயக்குநர் அபிஷன் ஜீவிந்த்... மேலும் பார்க்க

யூடியூப் டிரெண்டிங்கில் படை தலைவன்..!

நடிகர் விஜய்காந்த்தின் மகன் சண்முக பாண்டியன் நடித்துள்ள புதிய படமான படை தலைவன் படத்தின் டிரைலர் நேற்று (டிச.13) வெளியானது. கவனம் ஈர்த்த இந்தப் படத்தின் டிரைலர் யூடியூப் டிரெண்டிங்கில் இரண்டாம் இடம் பி... மேலும் பார்க்க

இனிய நாள் இன்று!

12 ராசிக்கான தினப்பலன்களை தினமணி இணையதளத்தின் ஜோதிடர் பெருங்குளம் ராமகிருஷ்ணன் துல்லியமாகக் கணித்து வழங்கியுள்ளார்.14-12-2024 சனிக்கிழமைமேஷம்:இன்று கலைத்துறையினருக்கு முயற்சிகளின் பேரில் புதிய ஒப்பந்த... மேலும் பார்க்க

ஜாமீன் கிடைத்தும் சிறையில் இரவைக் கழிக்கும் அல்லு அர்ஜுன்!

ஹைதராபாத் காவல்துறையால் கைது செய்யப்பட்ட நடிகர் அல்லு அர்ஜுனுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கப்பட்ட நிலையில், வெள்ளிக்கிழமை இரவு முழுவதும் சிறையில் இருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.தெலங்கானா உயா்நீதிமன்றம... மேலும் பார்க்க