செய்திகள் :

நகை, பணத்துக்காக மூதாட்டி கொலை... அம்பத்தூரில் பயங்கரம்!

post image

சென்னை அம்பத்தூர், சூரப்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் பொன்னம்மாள் (70). இவரின் கணவர் தாமோதரன். சென்னை துறைமுகத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இந்தத் தம்பதியினருக்கு 6 மகள்கள் உள்ளனர். அவர்கள் அனைவருக்கும் திருமணமாகி விட்டது. இந்தநிலையில் சில ஆண்டுகளுக்கு முன்பு தாமோதரன் இறந்துவிட்டார். அதனால் மூதாட்டி பொன்னம்மாள், தனியாக வசித்து வந்தார். நேற்று இரவு பொன்னம்மாளுக்கு அவரின் மகள்களில் ஒருவர் போன் செய்திருக்கிறார். ஆனால் பொன்னம்மாள் போனை எடுக்கவில்லை. அதனால் சந்தேகமடைந்த பொன்னம்மாளின் மகள், தனக்கு தெரிந்த ஒருவருக்கு போன் செய்து அம்மாவை பார்த்துவிட்டு வரும்படி கூறியிருக்கிறார். அதன்படி அந்த நபர், பொன்னம்மாள் வீட்டுக்குச் சென்ற போது அங்கு பொன்னம்மாள் கொலை செய்யப்பட்டு கிடந்தார். அதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த நபர், பொன்னம்மாளின் மகளுக்கு போன் மூலம் தகவலைத் தெரிவித்தார். இதையடுத்து பொன்னம்மாளின் குடும்பத்தினர் அங்கு வந்து பார்த்தனர். பின்னர் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையத்து புதூர் போலீஸார், சம்பவ இடத்துக்கு வந்து பொன்னம்மாளின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

CCTV

இந்தச் சம்பவம் தொடர்பாக கொலை வழக்கு பதிவு செய்த போலீஸார், அந்தப் பகுதியில் உள்ள சி.சி.டி.வி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து வருகின்றனர்.

இதுகுறித்து புதூர் போலீஸார் கூறுகையில், ``கொலை செய்யப்பட்ட மூதாட்டி பொன்னம்மாளின் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் அவரின் முகம், கழுத்து பகுதிகளில் கத்தி குத்து காயங்கள் இருந்தன. பொன்னம்மாளின் வீட்டிலிருந்து பணம் கொள்ளையடிக்கப்பட்டிருப்பதும் விசாரணையில் தெரியவந்திருக்கிறது. மூதாட்டி பொன்னம்மாள், வீட்டில் தனியாக இருப்பதை தெரிந்தவர்களே இந்தச் சம்பவத்தில் ஈடுபட்டிருக்க வேண்டும். சி.சி.டி.வி கேமரா பதிவுகளை ஆய்வு செய்ததில் ஆட்டோ ஒன்று பொன்னம்மாள் வீடு பகுதியில் வந்து சென்ற காட்சிகள் பதிவாகியிருக்கிறது. அதனடிப்படையிலும் விசாரணை நடந்து வருகிறது. மூதாட்டி பொன்னம்மாள், நகை, பணத்துக்காக கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கிறோம். தொடர்ந்து விசாரித்து வருகிறோம். இந்தச் சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் தடயங்களையும் அழித்து விட்டு சென்றிருக்கிறார்கள். அதை வைத்துப் பார்க்கும் போது தொடர்ந்து குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்களே இந்தச் சம்பவத்திலும் ஈடுபட்டிருக்கலாம் என்று கருதுகிறோம். விரைவில் கொலையாளிகளைப் பிடித்து விடுவோம்'' என்றனர்.

போலீஸ் ரெய்டு: குக்கரில் சாதத்துடன் கஞ்சாவை அவித்த இளைஞர் - காட்டிக்கொடுத்த விசில்!

கேரள மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி ஏற்பட்ட பிறகு போதைப்பொருள் விற்பனை மற்றும் பயன்பாட்டை தடுக்கும் விதமாக 'ஆப்ரேஷன் தூஃபான்' செயல்படுத்தி வருகிறது. அதன் அடிப்படையில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட குற்ற... மேலும் பார்க்க

கடலூர்: `கடன் கொடுத்தால் அப்படிக் கூப்பிடுவியா..?' - சீறிய இளம்பெண்... அடித்துக் கொன்ற முதியவர்!

கடலூர் மாவட்டம், சிதம்பரம் மீதிக்குடியைச் சேர்ந்த காமாட்சிக்கும், கார்த்திக் என்பவருக்கும் சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை இருக்கிறது. இரண்டு ஆண்டுகளுக்கு முன... மேலும் பார்க்க

நெல்லை: `எவ்வளவு சொல்லியும் கேட்கலை...'- செல்போன் பேச்சால் ஆத்திரம்; அக்காவை கொன்ற தம்பி

நெல்லை மாவட்டம், சுத்தமல்லி மேல கிராமத்தைச் சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மனைவி கண்ணகி. இவர்களுக்கு ராமலட்சுமி என்ற மகளும், ராகுல் மற்றும் முத்துகிருஷ்ணன் என்ற இரண்டு மகன்களும் உள்ளனர். ஆறுமுகம், விவசாயம... மேலும் பார்க்க

'தகரக் கதவுகள்… பூட்டு இல்லை… ஃபிரிஸர் இல்லை' - இடியும் நிலையில் அரசு மருத்துவமனை பிணவறை கட்டிடம்

விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டையில் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை இயங்கி வருகிறது. அருப்புக்கோட்டையைச் சேர்ந்த மக்கள் மட்டுமில்லாமல், திருச்சுழி, காரியாப்பட்டி, கோவிலாங்குளம், கோபாலபுரம் உள்ளிட்ட... மேலும் பார்க்க

திருச்சி: காதலனுடன் விடுதியிலிருந்த இளம்பெண் மரணம்; போதை ஊசி காரணம்?

திருச்சி, அரியமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் சம் உசேன்(வயது: 19). இவர், அரியமங்கலத்தைச் சேர்ந்த 18 வயது யாஸ்மின் என்பவரைக் காதலித்து வந்துள்ளார். 12-ம் வகுப்பு வரை படித்துள்ள அந்தப் பெண் திருமணம் உள்ளிட... மேலும் பார்க்க

ஸ்ரீரங்கம் நகர காங்கிரஸ் கமிட்டி அலுலகத்தில் குட்கா பறிமுதல்; காங்கிரஸ் பிரமுகரிடம் விசாரணை

திருச்சி, ஸ்ரீரங்கம் ரெங்கா நகரில் (ஸ்ரீரங்கம் பழைய பஸ் ஸ்டாண்டு) நகர காங்கிரஸ் கமிட்டி அலுவலகம் அமைந்துள்ளது. அந்த அலுவலகத்தில் குட்கா பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக போலீஸாருக்கு ரகசிய தகவல... மேலும் பார்க்க