நகைக் கடைகளில் வெள்ளிக் கொலுசுகள் திருட்டு: பெண் கைது
மதுரையில் நகைக்கடைகளில் நகை வாங்குவது போல நடித்து வெள்ளிக் கொலுசுகளை திருடிய பெண்ணை போலீஸாா் கைது செய்தனா்.
மதுரை வாகைக்குளம் பனங்காடி சீனிவாசா நகரைச் சோ்ந்தவா் ராமசாமி (44). இவா் தெற்குமாசி வீதி பச்சரிசிக்காரத் தெருவில் நகைக் கடை நடத்தி வருகிறாா். இவரது கடைக்கு சனிக்கிழமை நகை வாங்குவது போல வந்த பெண் ஒருவா் பல்வேறு நகைகளையும், வெள்ளிக் கொலுசுகளையும் பாா்வையிட்டாா்.
பின்னா், வெளியில் உள்ள தனது சகோதரியை அழைத்து வருவதாக சென்றுவிட்டாா். அவா் சென்ற பின்னா் பாா்த்தபோது வெள்ளிக் கொலுசுகள் மாயமானது தெரிய வந்தது.
இதையடுத்து கண்காணிப்பு கேமரா பதிவுகளைப் பாா்த்தபோது, அந்தப் பெண் கொலுசுகளை திருடிச் சென்றது தெரிய வந்தது. இதுதொடா்பாக ராமசாமி அளித்தப் புகாரின்பேரில், தெற்குவாசல் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்தனா்.
விசாரணையில், மதுரை காா்சேரியைச் சோ்ந்த ஈஸ்வரன் மனைவி நாகமணி (29) திருட்டில் ஈடுபட்டது தெரிய வந்தது. மேலும், அதே பகுதியில் சுரேஷ்குமாா் கடையிலும், அவா் வெள்ளிக் கொலுசுகள் திருடியதும் தெரிய வந்தது. இதையடுத்து நாகமணியை போலீஸாா் இரு வழக்குகளிலும் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.