நடிகர் தர்ஷனுக்கு ஜாமீன்!
கன்னட நடிகர் தர்ஷனுக்கு ஜாமீன் வழங்கி கர்நாடக உயர்நீதிமன்றம் இன்று(டிச. 13) உத்தரவிட்டுள்ளது.
ரசிகரைக் கொலை செய்த வழக்கில் கன்னட நடிகர் தர்ஷன் கடந்த ஜூன் மாதம் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். கர்நாடக காவல்துறை தாக்கல் செய்துள்ள குற்றப்பத்திரிகையிலும் தர்ஷனின் பெயர் இடம்பெற்று இருந்தது.
இதனிடையே, முதுகு தண்டு அறுவை சிகிச்சைக்காக இடைக்கால ஜாமீன் கோரி கர்நாடக உயர்நீதிமன்றத்தில் தர்ஷன் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட இடைக்கால ஜாமீன் மனு மீது, கடந்த அக்.30-ல் நீதிபதி விஸ்வஜித் ஷெட்டி நிபந்தனைகளுடன் 6 வாரம் இடைக்கால ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்
இதையும் படிக்க: நடிகர் அல்லு அர்ஜுன் கைது..!
இதனையடுத்து, நடிகர் தர்ஷன் பெங்களூரு அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வரும் நிலையில், தனக்கு நிரந்தர ஜாமீன் கோரி கர்நாடக நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்நிலையில், இவ்வழக்கு இன்று கர்நாடக உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த நிலையில், தர்ஷன் உள்ளிட்ட இவ்வழக்கு தொடர்புடைய சிலருக்கு ஜாமீன் வழங்கி நீதிமன்றம் உத்தரவிடப்பட்டுள்ளது.