செய்திகள் :

நடிகர் ராகவா லாரன்ஸ் உதவியாளர் எனக் கூறி மோசடியில் ஈடுபட்டவர் கைது

post image

சென்னை: நடிகர் ராகவா லாரன்ஸ் உதவியாளர் என கூறி தொண்டு நிறுவனம் தொடங்கப்படுவதாகவும், அதில் உங்கள் பிள்ளையின் அனைத்து படிப்பு செலவுகளையும் தாங்களே பார்த்துக் கொள்வதாகக் கூறி ரூ.60 ஆயிரத்தை ஏமாற்றி ஆள் மாறாட்டம் செய்த வழக்கில் ஈடுபட்ட நபரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

சென்னை எழும்பூர் பெருமாள் ரெட்டி தெருவை சேர்ந்த வீரராகவன்(28) கடந்த 4 ஆம் தேதி சென்னை எழும்பூர் குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார்.

அந்தப் புகாரில் மர்ம நபர் ஒருவர் எனது செல்போனுக்கு தொடர்பு கொண்டு நான் திரைப்பட நடிகரான ராகவா லாரன்ஸின் உதவியாளர். லாரன்ஸ் தொண்டு நிறுவனம் தொடங்குவதாகவும், அதில் உங்கள் பிள்ளையின் அனைத்து படிப்பு செலவுகளையும் தாங்களே பார்த்துக் கொள்கிறோம். அதற்காக முதலில் ரூ.8,475 பணத்தை செலுத்தி குழுவில் உறுப்பினர்களாக இணைத்துக் கொள்ளுங்கள் எனக் கூறினார். அதனை நம்பி போன் பே மூலம் பணத்தை அனுப்பினேன்.

பின்னர், மீண்டும் என்னை தொடர்பு கொண்டு ராகவா லாரன்ஸ் தொண்டு நிறுவனத்தில் உங்களுக்கு வங்கிக் கணக்கு தொடங்க வேண்டும். அதற்காக ரூ.2,875 அனுப்புங்கள் என கூறினைர். அதனை நம்பி மீண்டும் பணத்தை அனுப்பினேன்.

இதனைத் தொடர்ந்து மீண்டும் எனது செல்போனுக்கு தொடர்பு கொண்டு வங்கிக் கணக்கு தொடங்கப்பட்டுவிட்டது.மேலும் ஐம்பதாயிரம் கட்டினால் உங்களின் குழந்தையின் பட்டப்படிப்பு வரையிலான செலவை எங்களது தொண்டு நிறுவனம் பார்த்துக் கொள்ளும் என்றார். அதனை நம்பி மீண்டும் ரூ.50 ஆயிரத்தை செலுத்தினேன்.

பின்னர், மீண்டும் தொடர்பு கொண்டு ரூ.30,000 அனுப்பினால் ரூ.80,000-க்கான திட்டத்தில் இணைத்துக் கொள்வதாக கூறியுள்ளார். இதனால் சந்தேகமடைந்த

வீரராகவன் சுதாரித்துக் கொண்டு, அந்த நபரிடம் தன்னுடைய பணத்தை திரும்பத் தருமாறு வலியுறுத்தியுள்ளார். இதனைத்தொடர்ந்து அந்த மர்ம நபர் செல்போனை சுவிட்ச் ஆப் செய்துவிட்டார்.

இதையும் படிக்க |திமுக ஆட்சியில் குற்றவாளிகளுக்கு பயமில்லை: இபிஎஸ் விமர்சனம்

இந்த நிலையில், திரைப்பட நடிகர் ராகவா லாரன்ஸ் தொண்டு நிறுவனம் சார்பில் தன்னிடம் மோசடி செய்து பெறப்பட்ட ரூ.61.550-ம் அந்த மர்ம நபரிடமிருந்து மீட்டுத் தருமாறு திருவல்லிக்கேணி மாவட்ட துணை ஆணையர் சந்தோஷ்ஹதி மானியிடம் புகார் அளித்தார்.

அந்த புகாரின் அடிப்படையில் எழும்பூர் மாவட்ட காவல் உதவி ஆணையர் ஜெகதீசன் மேற்பார்வையில் காவல் ஆய்வாளர் வெற்றிச்செல்வன் தலைமையில் குற்றப்பிரிவு உதவி ஆய்வாளர் விமல் மற்றும் குற்றப்பிரிவு உதவி காவல் ஆய்வாளர் மாரி, காவலர் பவித்ரன் ஆகியோர் ஒன்றிணைந்து விசாரணை மேற்கொண்டு தீவிரமாக தேடி வந்தனர்.

அப்போது, இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட மர்ம நபர் வேலூரில் பதுங்கி இருப்பதாக கிடைத்த தகவலை அடுத்து வேலூருக்கு விரைந்து சென்ற தனிப்படை போலீசார் அவரை கைது விசாரணை மேற்கொண்டனர்.

தனிப்படை போலீசாரின் விசாரணையில், அந்த மர்ம நபர் வேலூர் பகுதியைச் சேர்ந்த தினேஷ்குமார் என்பது தெரியவந்தது. இதையடுத்து, ஆள்மாறாட்டம் செய்து ஏமாற்றுதல் பிரிவின் கீழ் தினேஷ்குமார் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

அவரிடமிருந்து போன் பே மூலம் மோசடி செய்த ரூ. 60 ஆயிரத்தையும் கைப்பற்றினர்.

வங்கக்கடலில் உருவானது ஃபென்ஜால் புயல்!

தென்மேற்கு வங்கக்கடலில் ஃபென்ஜால் புயல் உருவாகியுள்ளது.ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலாக நிலைக்கொண்டிருந்த புயல் சின்னம், இன்று பிற்பகல் 2.30 மணிக்கு ஃபென்ஜால் புயல் உருவானதாக சென்னை வானிலை ஆய்வு மையம்... மேலும் பார்க்க

ஃபென்ஜால் புயலை எதிா்கொள்ள 24 மணி நேரமும் தயாா்: மேயர் பிரியா

ஃபென்ஜால் புயலை எதிர்கொள்ள சென்னை மாநகராட்சி தயார் நிலையில் உள்ளதாக பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் பிரியா தெரிவித்தார்.வார்டுக்கு 10 பேர் வீதம் 28 ஆயிரம் பணியாளர்கள் தயார் நிலையில் உள்ளனர் எனவும் மாந... மேலும் பார்க்க

கரை ஒதுங்கிய கப்பல் வழிகாட்டி மிதவை: அப்புறப்படுத்தும் கடலோர காவல்படை!

வட சென்னை கடற்கரையில் ஒதுங்கிய கப்பல் வழிகாட்டி மிதவை கருவியை கடலோர காவல்படையினர் அப்புறப்படுத்தி வருகின்றனர்ஃபெங்கால் புயல் எதிரொளியாக கடல் சீற்றமாக காணப்படுகிறது. குறிப்பாக எண்ணூரிலிருந்து காசிமேடு ... மேலும் பார்க்க

விஜய்க்கு அரசியல் கை கொடுக்கும்: ஆனந்த் ராஜ் பேட்டி

நடிகர் விஜய் அரசியல் வருகைக்கு வாழ்த்துகள். அவர் நடிக்க வந்ததிலிருந்து வெற்றி தான், நிச்சயமாக அரசியல் அவருக்கு கை கொடுக்கும் என தஞ்சையில் நடிகர் ஆனந்த் ராஜ் தெரிவித்தார்.உலக புகழ் பெற்ற தஞ்சாவூர் பெரி... மேலும் பார்க்க

ஃபென்ஜால் புயல்: 2229 நிவாரண முகாம்கள் தயார்!

அதிகனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள மாவட்டங்களில் 2229 நிவாரண முகாம்கள் தயாராக வைக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:வங்கக் கடலில் ஆழ்... மேலும் பார்க்க

திமுக ஆட்சியில் குற்றவாளிகளுக்கு பயமில்லை: இபிஎஸ் விமர்சனம்

சென்னை: தமிழகத்தில் திமுக ஆட்சியில் குற்றவாளிகளுக்கு பயமில்லை திருப்பூர் சேமலைக் கவுண்டம்பாளையம் சம்பவத்தை மேற்கொள் காட்டி அதிமுக பொதுச்செயலாளரும் எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி கே.பழனிசாமி விமர்சன... மேலும் பார்க்க