செய்திகள் :

நடிகை கஸ்தூரியை தீவிரமாக தேடும் போலீஸார்... முன்ஜாமீன் கோரி மனுத் தாக்கல்..!

post image

வன்கொடுமை தடுப்புச் சட்டம்போல் பிராமணர்களைப் பாதுகாக்க ஒரு புதிய சட்டம் இயற்ற வேண்டும் என்று மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தி இந்து மக்கள் கட்சி சார்பில் சென்னை எழும்பூரில் கடந்த 3-ம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு பேசிய நடிகை கஸ்தூரி, தெலுங்கு பேசும் மக்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்துகளை தெரிவித்தார். இதற்கு தெலுங்கு மக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அதனால் நடிகை கஸ்தூரி, வருத்தம் தெரிவித்து பேட்டியும் கொடுத்தார். ஆனாலும் நடிகை கஸ்தூரி மீது நடவடிக்கை எடுக்கும்படி சென்னை, திருச்சி, தேனி, மதுரை ஆகிய மாவட்டங்களில் காவல் நிலையங்களில் புகார் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் நடிகை கஸ்தூரி மீது 4 மாவட்ட போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர். இதுதவிர, 9 மாவட்டங்களில் புகார்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இதுதவிர அரசு ஊழியர்களை அவதூறாக பேசியதாகவும் நடிகை கஸ்தூரி மீது புகார்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

நடிகை கஸ்தூரி

சென்னை எழும்பூர் காவல் நிலையத்தில் அகில இந்திய தெலுங்கு சம்மேளனம் சார்பில் கொடுக்கப்பட்ட புகாரின் அடிப்படையில், நடிகை கஸ்தூரி மீது 4 சட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. இந்த வழக்கில் நடிகை கஸ்தூரிக்கு எழும்பூர் போலீஸார் சம்மன் அனுப்பினர். ஆனால் நடிகை கஸ்தூரியின் சென்னை போயஸ்கார்டனில் உள்ள வீடு பூட்டியுள்ளது. அதனால் நடிகை கஸ்தூரி பயன்படுத்தும் செல்போனில் அவரை போலீஸார் தொடர்பு கொண்டபோது அதுவும் ஸ்விட்ச் ஆஃப் செய்யப்பட்டிருந்தது. இதையடுத்து நடிகை கஸ்தூரியிடம் விசாரணை நடத்த அவர் எங்கு இருக்கிறார் என போலீஸார் தேடிவருகிறார்கள்.

இதற்கிடையில் நடிகை கஸ்தூரி தரப்பில் சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் முன்ஜாமீன் கேட்டு மனுவும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த மனு மீது நீதிமன்றம் என்ன நடவடிக்கை எடுக்கிறதோ அதன்பிறகே நடிகை கஸ்தூரி மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க முடியும் என்று போலீஸார் தெரிவித்தனர்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...https://tinyurl.com/crf99e88

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...https://tinyurl.com/crf99e88

திருச்சி: காவிரி ஆற்றங்கரையில் இரண்டாவது முறையாக கிடைத்த ராக்கெட் லாஞ்சர்! - அதிர்ச்சியில் மக்கள்

திருச்சி மாவட்டம், அந்தநல்லூர் அருகே காவிரி ஆற்றின் கரையில் கடந்த மாதம் 30 - ஆம் தேதி ராக்கெட் லாஞ்சர் ஒன்று கண்டெடுக்கப்பட்டது. அதுகுறித்து போலீஸார் விசாரணை செய்ததில், அது கொரிய போரின் போது அமெரிக்க ... மேலும் பார்க்க

வேலூர்: முன்னாள் ராணுவ வீரர் மீதான போக்சோ வழக்கு; 25 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்த நீதிமன்றம்

வேலூர் மாவட்டம், குடியாத்தம் அருகேயுள்ள ஒலக்காசி ரோடு பிள்ளையார் கோயில் தெருவைச் சேர்ந்தவர் சேகர் (61).முன்னாள் ராணுவ வீரரான சேகர், கடந்த 2022ஆம் ஆண்டு 16 வயதான பள்ளி மாணவியிடம் பாலியல் வன்கொடுமையில் ... மேலும் பார்க்க

பெண் காவலர் பாலியல் சீண்டல் வழக்கு: ஓய்வுபெற்ற ஐ.ஜி முருகனுக்கு பிடி வாரண்ட் - நீதிமன்றம் அதிரடி!

இன்று சைதாப்பேட்டை 11வது மெட்ரோ பாலிட்டன் நீதிமன்றத்தில் முன்னாள் ஐ.ஜி முருகனுக்கு எதிராக பெண் எஸ்.பி தொடர்ந்த பாலியல் சீண்டல் வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. விசாரணைக்கு ஆஜராகாத முருகனுக்கு நீதிபதி ... மேலும் பார்க்க

சேலம்: பள்ளி வகுப்பறையில் மாணவரை கால் பிடித்து விடச் சொன்ன ஆசிரியர்; பரவிய வீடியோ, பாய்ந்த நடவடிக்கை

சேலம் மாவட்டம், தலைவாசல் தாலூகாவிற்கு உட்பட்ட கிழக்கு ராஜாபாளையம் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய அரசு தொடக்கப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் கிழக்கு ராஜாபாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகு... மேலும் பார்க்க

இறந்ததாக அறிவித்த 3 மருத்துவர்கள்; தகனம் செய்யும்போது உயிர்த்தெழுந்த இளைஞர் - என்ன நடந்தது?

ராஜஸ்தான் மாநிலம், ஜுன்ஜுனு மாவட்டத்தில் வசித்தவர் ரோஹிதாஷ் குமார் (25). வாய் பேச முடியாத, காது கேட்காத மாற்றுத்திறனாளியான இவருக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டிருக்கிறது. உடனே அவரின் உறவினர்கள், அ... மேலும் பார்க்க

நடிகை சீதா வீட்டில் நகை திருட்டு; போலீஸ் விசாரணை!

தமிழ் சினிமாவில் பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து பிரபலமானவர் நடிகை சீதா. இவர் விருகம்பாக்கம் புஷ்பா காலனியில் வசித்து வருகிறார். இந்தநிலையில் விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் அவர் புகார் ஒன்ற... மேலும் பார்க்க